உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுக்கு அதிக வரி ஏன்? அமெரிக்காவின் மழுப்பல் பதில்

இந்தியாவுக்கு அதிக வரி ஏன்? அமெரிக்காவின் மழுப்பல் பதில்

வாஷிங்டன்:'உக்ரைனுடனான போரை முடிவுக் கொண்டு வர ரஷ்யாவுக்கு அழுத்தம் தருவதற்காகவே, அதனிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்தோம்' என அமெரிக்கா மழுப்பலான பதிலை அளித்துள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கு மேலாக போர் நடந்து வருகிறது. இதை நிறுத்துவதற்கான முயற்சியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பல நாடுகளுக்கும் இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்தது. அதில் இந்தியாவுக்கு 25 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தவிர, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீதம் என, மொத்தம் 50 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது. அதே நேரத்தில், இந்தியாவைவிட அதிகளவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படவில்லை. இந்நிலையில், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: ரஷ்யா போரை கைவிட அதிபர் டிரம்ப் மிகப்பெரிய அழுத்தம் தந்தார். இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வர விரும்புகிறார். இது ரஷ்யாவுக்கு அழுத்தம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் எடுத்த நடவடிக்கை. இவ்வாறு அவர் கூறினார். ஆனால், அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பின்னும் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெயின் அளவை இந்தியா குறைக்கவில்லை என்று, நம் நாட்டுக்கான ரஷ்யாவின் வர்த்தக பிரதிநிதி எவ்ஜெனி கிரிவா தெரிவித்தார்.

இந்திய பொருட்களை

வரவேற்கும் ரஷ்யா!

இந்தியாவுக்கான ரஷ்யாவின் துணை துாதர் ரோமன் பாபுஷ்கின் கூறியதாவது: இந்திய பொருட்கள் அமெரிக்க சந்தைக்குள் நுழைவதில் சிரமங்களை எதிர்கொண்டால், இந்திய இறக்குமதியை ரஷ்ய சந்தை வரவேற்கும். இந்தியாவுடனான எங்களின் உறவு மிகவும் முக்கியமானது. பல ஆண்டுகளாக இது போன்ற தடைகளை பார்த்து வருகிறோம். ஆனால், எங்கள் வர்த்தகம் வளர்ந்து வருகிறது. இந்தியாவை நட்பு நாடாக நினைத்தால் அமெரிக்கா இதுபோல் நடந்துகொள்ளாது. இந்தியாவுக்கு கூடுதல் வரி விதித்ததற்கும், உக்ரைனுடனான போருக்கும் தொடர்புபடுத்தி பார்க்கக் கூடாது. இந்தியா எங்களிடம் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றாலும், மேற்கத்திய நாடுகள் ஒத்துழைப்பு வழங்காது. அவர்கள் புதிய காலனித்துவ சக்தியை போன்று நடந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Ramesh Sargam
ஆக 21, 2025 21:43

காதுல பூ.


கண்ணன்
ஆக 21, 2025 10:47

அடேய் என்னை அடித்தால் எனக்குத்தான் வலிக்கும்- அடுத்தவனுக்கல்ல. இது புருயத அளவிற்கா மக்கு நீ?


Nathan
ஆக 21, 2025 09:56

அமெரிக்கா இன்று இந்த அளவுக்கு வெற்றிகரமாக பணக்கார நாடாக இருப்பதற்கு இந்தியாவில் உள்ள இட ஒதுக்கீடு கொள்கையும் ஒரு காரணமே அமெரிக்க நிறுவனங்களின் உயர் பதவியில் இருப்பவர்கள் பெரும்பாலும் அவர்கள் தான். இங்கு அவர்கள் சரியான வாய்ப்புகளை பெற இயலாது என்று முடிவுக்கு வந்ததால் தான் மேற்கத்திய நாடுகளில் குடியேறி அங்கேயே குடியுரிமை பெற்று விடுகின்றனர். அதற்காக இட ஒதுக்கீட்டை அனுபவித்தவர்கள் அங்கு சென்று குடியுரிமை பெற்று அங்கு செட்டில் ஆகவில்லை என்றோ திறமையில் வராதவர்கள் என்றோ நான் கூறமாட்டேன் அவர்களும் உயர் பதவியில் இருக்கின்றனர் . ஆனால் இங்கு எப்போதும் நாம் சிறந்த வாய்ப்பை பெற இயலாது என்று கருதுவதால் அங்கே போய் செட்டில் ஆகி இந்தியாவை மறந்து விட்டு நிம்மதியாக வாழ வேண்டும் என்று சிலர் முடிவு செய்ய இட ஒதுக்கீடு ஒரு காரணம் எண்பது மட்டுமே என் கருத்து .


Nathan
ஆக 21, 2025 08:58

அமெரிக்கா இந்தியா மீது அதிக வரி விதித்து இருக்கும் போது இந்தியா இதுவரை மௌனம் காத்தது போதும் அவர்கள் 50 சதவிகிதமாக வரியை உயர்த்தும் போது அவர்களின் சமூக ஊடகங்கள் மீது கண்டிப்பாக பதில் வரி விதிக்க வேண்டும். அமெரிக்கா உடனான ராணுவ உபகரணங்களை வாங்கும் ஒப்பந்தங்களை நிறுத்தி வைப்பது நல்லது . அதேபோல் அவர்களின் எண்ணை அல்லாத பிற பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும்


பேசும் தமிழன்
ஆக 21, 2025 08:25

எங்களது நாட்டின் தேவைக்கு கச்சா எண்ணெய் வாங்குகிறோம்... எங்களுக்கு வரி.... அதே போல் கச்சா எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு வரியில்லை.... நீங்கள் வேண்டுமானால் அதே விலையில் கச்சா எண்ணெய் கொடுத்தால்.... உங்களிடமும் வாங்கிக் கொள்ள நாங்கள் தயார்..... நீங்கள் தயாரா ???


SUBBU,MADURAI
ஆக 21, 2025 03:39

Any dollar asset is risk. It can be asked by US to surrender. USD is not free currency, it is a tool of empire. The sooner countries develop alternate means to trade, it is safe.. India also must maintain minimum forex reserve and US treasury!


Shivakumar
ஆக 21, 2025 02:06

உக்ரைனுடனான போரை முடிவுக் கொண்டு வரவேண்டுமென்றால் அமெரிக்கா ரஷ்யாவிடம் வாங்கும் பொருட்களை நிராகரிதிக்கவேண்டும். அதைவிட்டு இந்தியாமேல் எதற்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். இந்திய மேல் அழுத்தம் கொடுக்க அமெரிக்கா யார். உங்க விருப்பத்திற்கு ஆட இந்திய ஒன்றும் உங்க காலனி நாடுஅல்ல .