உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடிலெய்ட் டெஸ்ட்: 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா

அடிலெய்ட் டெஸ்ட்: 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா

அடிலெய்டு : அடிலெய்டில் துவங்கிய இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸி.,யின் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்களை சாய்த்தார்.ஆஸ்திரேலியா சென்றுஉள்ள இந்திய அணி, ஐந்து போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. பெர்த்தில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது டெஸ்ட் இன்று, அடிலெய்டு ஓவல் மைதானத்தில், பகலிரவு போட்டியாக நடக்கிறது. இந்திய அணி கேப்டன்ரோகித் சர்மா, பெருவிரல்காயத்தில் இருந்து மீண்ட சுப்மன் கில் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். துவக்க வீரராக களமிறங்கிய ஜெய்ஸ்வால், ரன் எடுக்காமல் அவுட்டானார். கேஎல் ராகுலும், சுப்மன் கில்லும் ஜோடி சேர்ந்து ஓரளவு ரன் சேர்த்தனர். ராகுல் 37, கில் 31 ரன்னுக்கு அவுட்டாகினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோஹ்லி 7 ரன்னுக்கு அவுட்டானார். ரோகித் சர்மா 3 ரன்களுக்கு எல்பி டடிள்யூ முறையில் அவுட்டானார். பன்ட் 21, நிதிஷ்குமார் ரெட்டி 42, அஸ்வின் 22 ரன்களுக்கும், ஹர்சித் ராணா, பும்ரா ஆகியோர் ரன் எடுக்காமல் அவுட்டாக இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் 180 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.ஆஸி., அணியின் ஸ்டார்க் அபாரமாக பந்துவீசி ஆறு விக்கெட்களை சாய்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை