உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கம் உயருமா?

பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கம் உயருமா?

பாரிஸ் : ஒலிம்பிக் முடிய இன்னும் 5 நாள் மட்டும் உள்ள நிலையில், இந்தியாவின் பதக்க எண்ணிக்கை இரட்டை இலக்கை எட்டுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 65 வீரர், 45 வீராங்கனை என மொத்தம் 110 பேர், 16 போட்டிகளில் களமிறங்கி உள்ளனர். இதுவரை நடந்த போட்டி முடிவில் இந்தியாவுக்கு துப்பாக்கிசுடுதலில் மட்டும் 3 பதக்கம் கிடைத்தன. தனிநபர் பிரிவில் வெண்கலம் வென்ற மனு பாகர், கலப்பு இரட்டையரில் சரப்ஜோத் சிங்குடன் சேர்ந்து மற்றொரு வெண்கலம் வென்றார். ஸ்வப்னில் தன் பங்கிற்கு ஒரு வெண்கலம் கைப்பற்றினார்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாட்மின்டன் இரட்டையரில் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, ஒற்றையரில் சிந்து காலிறுதியில் தோற்றனர். வில்வித்தையிலும் தீபிகா குமாரி ஏமாற்றினார். குத்துச்சண்டையில் அமித் பங்கல் கைவிட, லவ்லினா, நிஷாந்த் தேவ் காலிறுதியில் வீழ்ந்தனர்.டென்னிசில் போபண்ணா-ஸ்ரீராம் பாலாஜி ஜோடி, சுமித் நாகல் முதல் சுற்றுடன் திரும்பினர். நேற்று வரை 66 நட்சத்திரங்கள் பங்களிப்பு முடிந்தது. அடுத்து டேபிள் டென்னிஸ் (3) பெண்கள் அணிகளுக்கான போட்டி மட்டும் மீதமுள்ளது.தவிர மல்யுத்தத்தில் 5 பேர், பளுதுாக்குதலில் மீராபாய் சானு போட்டியிட உள்ளனர். ஹாக்கியில் இந்திய அணி மீது நம்பிக்கை உள்ளது. தடகளத்தில் நீரஜ் சோப்ரா உட்பட 17 பேர் மீதம் இருப்பதால், பதக்க எண்ணிக்கை அதிகரிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

MUTHU
ஆக 07, 2024 09:33

பாரிஸ் ஒலிம்பிக் முடியும்முன் இந்தியாவின் மக்கள் தொகை ஒரு கோடி வேண்டுமானால் உயரும்.


sundarsvpr
ஆக 07, 2024 08:50

பதக்கம் பெறுவது முதல்மையானது அல்ல. அதற்கு உடல் பயிற்சி காலை மாலை சூரிய ஒளி உடலில் படவேண்டும். மனம் ஒருமைப்படுதல் இதற்கு பாண்டி கோலிக்குண்டு பம்பரம் கண்ணாமூச்சி போன்ற விளையாட்டுகள் வீட்டு வாசலில் விளையாடுவார்கள். வியாதிகள் வராது. இட்லி தோசை பலகாரங்கள் அத்திப்பூத்தாபோல் கிடைக்கும். 1983 ல் கிரிக்கட்டில் உலக கோப்பை வென்றோம். அதுபோல் தடகள போட்டியில் உலக தர வரிசையில் முன்வருவோம். மாணவ மாணவிகள் முதலில் உங்களின் உடல் பயிற்சி ஆசிரியரை வணங்கிவிட்டு மற்ற ஆசிரியர்களை வணங்குங்கள்.


Velan Iyengaar
ஆக 07, 2024 08:29

மல்யுத்தத்தில் வினிஷ் போகட் பெயரை எழுத தயங்குவது ஏன் ??


v j antony
ஆக 07, 2024 07:48

உலகின் மக்கள் தொகையில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு விளையாட்டு துறையில் ஒரு தங்க பதக்கம் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளோம் பணம் கொடுத்து வாக்குகளை வாங்கி பணம் சம்பாதிக்க மட்டுமே அரசியலுக்கு வரும் கட்சிகளிடம் மாற்றத்தை எதிர்பார்ப்பது வீண் வேலை விளையாட்டு துறையிலும் ஊழல் உள்ளது திறமையானவர்களை அடையாளம் கண்டு ஊக்குவிக்க யாரும் இல்லை பயிற்சிகள் மேற்கொள்ள வசதிகள் இல்லை எப்போது இந்த நிலை மாறுமோ


Duruvesan
ஆக 07, 2024 08:31

உடைய அண்ணா ஒன்றிய அரசின் அமைச்சர் ஆனால் மட்டுமே இது நடக்கும்


மேலும் செய்திகள்