உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீன அதிபரை 2 வாரங்களில் சந்திப்பேன்: வரி விதிப்பில் பின்வாங்கினார் அதிபர் டிரம்ப்

சீன அதிபரை 2 வாரங்களில் சந்திப்பேன்: வரி விதிப்பில் பின்வாங்கினார் அதிபர் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீன அதிபர் ஜி ஜின் பிங்கை 2 வாரங்களில் சந்திப்பேன். 100% வரி விதிப்பு நிலையானது அல்ல என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்து உள்ளார்.சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 100 சதவீதம் கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இந்த கூடுதல் வரிவிதிப்பு வரும், நவ., 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அவர் தெரிவித்து இருந்தார்.இதனால், சீனப் பொருட்களுக்கான வரி விதிப்பு ஏற்கனவே உள்ள 30 சதவீதத்துடன், தற்போதைய 100 சதவீதத்தையும் சேர்த்து 130 சதவீதமாக அதிகரித்தது. இந்த வரி விதிப்பிற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், 'இரண்டு வாரங்களில், சீன அதிபர் ஜி ஜின் பிங்கை சந்திப்பேன். 100% வரிகள் நீடிக்க முடியாதவை. இத்தகைய நடவடிக்கை நீண்ட காலத்திற்கு நிலையானதாக இருக்காது. அவர்கள் என்னை அவ்வாறு செய்ய கட்டாயப்படுத்தினர்' என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.இது அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக பதட்டங்களை குறைக்க வழி வகுக்கும் என சர்வதேச பொருளாதார நிபுணர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

JAYACHANDRAN RAMAKRISHNAN
அக் 18, 2025 11:23

இவர் என்ன பேசப் போகிறார். பாகிஸ்தான் பிரதமரும் பாகிஸ்தான் இராணுவ தளபதியும் கொஞ்சம் சாம்பிள் கல்லையும் மண்ணையும் கொண்டு வந்து காட்டி வர்த்தகம் செய்வதாக சொன்னார்கள். அவர்கள் காட்டியது உண்மையில் நன்றாக வர்த்தகத்துக்கு உகந்ததாக இருந்தால் வர்த்தகம் செய்வதாக இருப்பதாகவும் ஆகவே அதனை பிராசஸ் செய்ய சீனாவில் அனுமதி தர வேண்டும். ஏனெனில் பாகிஸ்தானில் நல்ல திறமையான தொழிலாளிகள் இல்லை. அதை அமெரிக்கா கொண்டு சென்று பிராசஸ் செய்தால் செலவு அதிகம் ஆகும். மேலும் அமெரிக்காவில் வரிகள் அங்கு லேபர் சார்ஜ் அதிகம். ஆகவே சீனாவில் அனுமதி தர வேண்டும் என்று கேட்பார்.


Mani . V
அக் 18, 2025 04:06

ஓ, இந்த ரெண்டு வாரப் பைத்தியமா? எதெற்க்கெடுத்தாலும் ரெண்டு வாரம், ரெண்டு வாரம். நாட்டை திவாலாக்கி விட்டது. அதை ஈடுகட்ட வெளிநாட்டுப் பொருட்களுக்கு வரி விதித்து ஈடுகட்டப் பார்க்கிறது.


dfghjng
அக் 17, 2025 22:52

இவர்கள் சந்தித்து என்ன பயன்


ராஜ்
அக் 17, 2025 20:51

கோமாளி


Sun
அக் 17, 2025 20:31

ஒருவன் ஒருத்தன அடிச்சா அடி வாங்கியவன்தானே கதறுனும். இங்கே அடிச்சேன்னு சொல்றவனே பதறுறான். மனநலம் பாதிக்கப்பட்டவனை எல்லாம் தலைமைப் பதவிக்கு உட்கார வைத்தால் எல்லாமே தலை கீழாகத்தான் நடக்கும்.


தாமரை மலர்கிறது
அக் 17, 2025 20:10

வரி விதிச்சுதான் பாரேன். குட்ட குட்ட குனிய, சீனா ஒன்றும் கோழை அல்ல.


M Ramachandran
அக் 17, 2025 19:46

டிரம்பின் அரசியலில் இது போல் சறுக்கல் வேறு எந்த அதிபர்களும் சந்திருக்க மாட்டார்கள்.


Santhakumar Srinivasalu
அக் 17, 2025 19:17

லூசு பைய!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை