உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு சொல்கிறது ஈரான்!

தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்; இஸ்ரேலுக்கு சொல்கிறது ஈரான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெருசலேம்: ''அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்'' என ஈரான் தெரிவித்துள்ளது.மேற்காசிய நாடான இஸ்ரேல், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையேயான மோதல் இன்னும் முடிந்தபாடில்லை. இஸ்ரேலுக்கு பதிலடி தரும் வகையில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவான ஹவுதி பயங்கரவாத படையினர், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து, ஏமனிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.இதற்கு, ஏழு மடங்கு பதிலடி தரப்படும் என, இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. ஹவுதி பயங்கரவாத அமைப்புக்கு எதிராக பெரும் தாக்குதல் நிச்சயம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து இருந்தார். இந்நிலையில், ''அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் நாங்கள் பதிலடி கொடுப்போம்'' என இஸ்ரேலுக்கு ஈரான் தெரிவித்துள்ளது.இது குறித்து ஈரானின் பாதுகாப்புத்துறை அமைச்சர் அஜீஸ் நசிர்சாதே கூறியதாவது: அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் ஈரான் பதிலடி கொடுக்கும். இந்தப் போரை அமெரிக்கா அல்லது இஸ்ரேல் தொடங்கினால், ஈரான் அவர்களின் தளங்கள் மற்றும் படைகளை எங்கிருந்தாலும், எப்போது வேண்டுமானாலும் குறிவைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Elango
மே 06, 2025 20:24

ஆணவம் பிடித்த இஸ்ரேல் ...அதற்கு தகுந்த பாடம் கற்பிக்க பட வேண்டும் . மதம் தாண்டி மனித நேயம் வேண்டும். நம் அண்டை வீட்டாரின் நிலத்தை அபகரிக்க கூடாது


மீனவ நண்பன்
மே 06, 2025 22:05

ஒரு நடை காஜா போயிட்டு எதிர்ப்பை தெரிவிக்கவும்


அப்பாவி
மே 05, 2025 11:40

அங்கங்கே அடிச்சிக்கிட்டு சாவணும். உலகில் மக்கள் தொகை எக்கச்சக்கமாயிட்டு.


GoK
மே 05, 2025 11:33

இவங்க பண்ற அட்டூழியம் தாங்க முடியல...ரோடுல துணி போட்டு கூவரது எங்க இவனுங்க அநியாயம் பண்ணிட்டு வம்ப வலைக்கு வாங்கிட்டு அடி படரானுங்களோ துணைக்கு எஙகிருந்தாலும் இவனுங்க ஆளுங்களா குண்டு வெடிக்கிறது, ஜனங்களை கொலை பண்றது அப்பறம் அய்யோ முறையொண்ணு அலற்றது இதே ரோதனயா போச்சு. எல்லாம் பாலவனதுளதான இருந்தானுங்க..இப்ப யேள்ளபக்கமும் பரவி உலகத்தையே அழிக்க பொரானுங்க


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 05, 2025 09:10

இவர்கள் முதலில் பெரும்பாலும் மறைமுகமாக, வேறொருவர் மூலம் தாக்குதல் நடத்துவார்கள், பின்னர் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம் என்று மிரட்டுவார்கள். இஸ்ரேலுக்கு ஈரான் எப்படியோ அதேபோல இந்தியாவிற்கு பாகிஸ்தான். இஸ்ரேலுக்கு 100 சதவிகிதம் அமெரிக்க ஆதரவு உள்ளது ஆனால் இந்தியாவிற்கு அமெரிக்காவிலிருந்து வாய்மொழி ஆதரவு மட்டுமே கிடைக்கும். மேலும் பாகிஸ்தானுக்கு சீன ஆதரவு. ரஷ்யாவின் பலம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்தியா உண்மையில் ஆதரவற்ற நிலையிலேயே உள்ளது. இந்த சூழலில் இருந்து மீள ஒரே வழி இந்தியா ஒரு தனித்துவம் மிகுந்த வல்லரசாக உருவாக வேண்டும். வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழிக்கு ஏற்ப இந்தியா எதிர்ப்புகளை தகர்க்கும் வல்லமை பெறவேண்டும். பாரதியின் வாக்கு - வல்லமை தாராயோ இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே


MUTHU
மே 05, 2025 09:02

இவ்வளவு நாள் நீங்க கொடுத்த பதிலடியிலே இஸ்ரேல் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை