உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / வௌிநாட்டவர் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம் இந்தியர்களுக்கு பாதிப்பா? இந்தியர்களுக்கு அடித்த இடி

வௌிநாட்டவர் பணி உரிமம் தானாக புதுப்பிப்பது நிறுத்தம் இந்தியர்களுக்கு பாதிப்பா? இந்தியர்களுக்கு அடித்த இடி

நியூயார்க்: அமெரிக்காவில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பணி உரிமம், இனி தானாக நீட்டிக்கப்படாது என்ற புதிய விதியை, அமெரிக்க அரசு நேற்று முன்தினம் இரவு திடீரென அமல்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபராக இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து டொனால்டு டிரம்ப் குடியேற்ற விதிகளில் பல்வேறு கெடுபிடிகளை விதித்து வருகிறார். குடியேற்ற விதிகளை மேலும் கடுமையாக்கும் நடவடிக்கையாக, அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பணி உரிமத்தை தானாக புதுப்பிப்பதை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டு, உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு இந்தியர்களுக்கு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. முந்தைய அதிபர் ஜோ பைடன் ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 540 நாட்கள் வரை பணி உரிமம் தானாக நீட்டிக்கும் வசதி இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இனி, பணி உரிமம் நீட்டிப்புக்கு விண்ணப்பித்தால், மறு ஆய்வுக்கு உட்படுத்தப்படுவர் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. பணி உரிமம் நீட்டிக்கப்படும் வரை அவர்களால், இனி வேலை செய்ய முடியாது.

யார் யாருக்கு பாதிப்பு

எச்1பி விசா வைத்துள்ளோரின், எச் - 4 விசா வைத்துள்ள கணவர் அல்லது மனைவி படிப்புக்குப் பிந்தைய நேரடி பயிற்சிக்கான எப் - 1 விசா வைத்துள்ள மாணவர் அ கதிகளாக அடைக்கலம் கேட்டு விண்ணப் பித்துள்ளோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி