வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அமெரிக்க அதிபர் டிரம்பு எதிர் பார்த்த அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வில்லை. அந்த ஆத்திரத்தில் அவர் ஈரான் மீது போர் தொடுக்க முயல்வார்.
பெஹர்ஷெபா, ஜூன் 21-இஸ்ரேலின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஈரான் ஏவுகணைகளை வீசி வரும் நிலையில், ஈரான் மீது நேரடியாக தாக்குதல் நடத்தப்படுமா என்பது குறித்து இரு வாரங்களில் முடிவு செய்வதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=wckqcpa6&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மேற்காசிய நாடான ஈரான் அணு ஆயுத தயாரிப்பின் இறுதி கட்டத்தில் இருப்பதாகவும், ஓராண்டுக்குள் அதை அடைந்துவிடும் என அதே பிராந்தியத்தில் உள்ள இஸ்ரேல் அஞ்சுகிறது. இதன் காரணமாக, ஈரானிடம் அணுசக்தி ஒப்பந்த பேச்சை அமெரிக்கா முன்னெடுத்தது. அணு ஆயுதம் தயாரிக்க இயற்கை யுரேனியமும், அதன் செறிவூட்டலும் தேவை. ஈரானில் யுரேனியம் கிடைக்கிறது. மேலும் நாட்டின் பல பகுதிகளில் அணு செறிவூட்டல் மையங்களையும் ஈரான் அமைத்துள்ளது. 'இங்கு யுரேனியத்தை, 60 சதவீத தரத்தில் ஈரான் செறிவூட்டி வருகிறது. அணு ஆயுதம் தயாரிக்க 90 சதவீதத்திற்கு மேல் செறிவூட்ட வேண்டும். இந்த நிலையை சில மாதங்களில் ஈரான் அடையக் கூடும்' என சர்வதேச அணுசக்தி முகமையும் எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஈரான் - அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்த பேச்சு கடந்த வாரம் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து ஈரான் மீது இஸ்ரேல் ஜூன் 13nd எதிர்பாராத தாக்குதலை துவங்கியது. இதில் அணுசக்தி நிலையங்கள், ஏவுகணை மையங்கள் சேதமாகின. முக்கிய தளபதிகள் பலர் துல்லிய தாக்குதலுக்கு பலியாகினர். ஈரானும் பதில் தாக்கி வருகிறது. கடந்த எட்டு நாட்களாக நடக்கும் சண்டையில் இஸ்ரேலின் முக்கிய நகரங்களான டெல் அவிவ், ஜெருசலேம், ரமாத் கன், ஹைபா, பெஹர்ஷெபா ஆகியவை கடும் சேதமடைந்தன. குடியிருப்புகள், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மட்டுமின்றி மிகப்பெரிய மருத்துவமனை மீது குண்டு வீசப்பட்டது. இதை போர் குற்றம் என கூறிய இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. பழிதீர்ப்போம் என கூறிய இஸ்ரேல் ராணுவம், ஈரானின் அராக் பகுதியில் உள்ள முக்கிய கனநீர் அணு உலையை தாக்கியது.இது மட்டுமின்றி நேற்று இஸ்ரேலின், 60 போர் விமானங்கள் ஈரான் எல்லைக்குள் நுழைந்து ஏவுகணை தயாரிப்பு ஆலைகள், ஈரானின் ராணுவ ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றின் மீது குண்டு வீசியது.மேலும், ஈரானின் பார்தோ பகுதியில் முக்கியமான அணு நிலையம் உள்ளது. ஏவுகணைகள் ஊடுருவாத வகையில் மலைக்குள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணு உலையை அழிக்க, 'பங்கர் பஸ்டர்' எனப்படும் மலைகள், பதுங்கு குழிகளை 200 அடி வரை ஊடுருவி தகர்க்கும் ஏவுகணை தேவை. இது தற்போது அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளது. இதுவரை ஈரான் மீதான தாக்குதலில் அமெரிக்காவின் நேரடி பங்கு ஏதுமில்லை. இந்நிலையில், நேரடி தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அறிக்கை வெளியிட்டார், அதில், 'அணுசக்தி திட்டம் குறித்து பேசுவதற்கு கணிசமான வாய்ப்பு இருப்பதால், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதலில் அமெரிக்க ராணுவம் நேரடியாக ஈடுபடுமா என்பது குறித்து இரண்டு வாரங்களுக்குள் முடிவு செய்வேன். 'பாதுகாக்கப்பட்ட பார்தோ யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தைத் தாக்குவதன் வாயிலாக நேரடி தாக்குதலில் இறங்கலாமா என யோசித்து வருகிறேன்' என கூறினார்.இருப்பினும், அணுசக்தி தொடர்பான பேச்சுக்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி பேட்டி ஒன்றில் கூறியதாவது: அமெரிக்க அதிகாரிகள் பேச்சு நடத்த வேண்டும் என்று கேட்டனர். இல்லை என்பதே எங்கள் பதில். இஸ்ரேலிய ராணுவ நடவடிக்கைகள் குறித்து டிரம்பின் கருத்துக்கள், இந்த தாக்குதல்களில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதைக் காட்டுகிறது.நாங்கள் தற்காப்பில் ஈடுபட்டுள்ளோம், மேலும் இந்த தற்காப்பு தாக்குதல் நிறுத்தப்படாது. இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடரும் வரை நாங்கள் எந்த பேச்சுக்கும் தயாராக இல்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவே மேக்ரோன், ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாடெபுல் ஆகியோர் 'ஈரானுக்கு பேச்சு நடத்த வாய்ப்பு வழங்கப்படும். அதை தவிர்த்தால் இரு நாடுகளுக்கு இடையே சண்டை மேலும் அதிகரிக்கும். எனவே நம்பகத்தன்மையுடன் ஈரான் பேச்சில் ஈடுபட வேண்டும்' என கூறியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரான் மீதான நேரடி தாக்குதலுக்கு இரு வாரங்களில் முடிவெடுப்பதாக அறிவித்துள்ள நிலையில், இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு இது குறித்து கூறுகையில், “அதிபர் டிரம்பின் முடிவுகளை மதிக்கிறேன். ஆனால் இலக்குகளை அடைய எந்த வெளிநாட்டு அனுமதிக்காகவும் இஸ்ரேல் காத்திருக்காது. அதிபர் டிரம்ப் ஈரானை தாக்க முடிவு செய்தாலும் இல்லாவிட்டாலும், ஈரானின் அனைத்து அணுசக்தி நிலையங்களையும் அகற்றும் திறன் நம் நாட்டிற்கு உள்ளது,” என்றார்
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவுக்கு சென்று உள்ளார். அங்கு பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பிரிட்டன் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சு நடத்தினார். இஸ்ரேல் - -ஈரான் மோதலால் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்க இந்த கூட்டம் நடந்தது. அதில், 'ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க விரும்பவில்லை, அதே சமயம் அணு ஆற்றலை பொது மக்கள் பயன்பாட்டுக்காக கொண்டுவர செறிவூட்டலை கைவிட முடியாது' என அராக்சி கூறினார்.
அமெரிக்க அதிபர் டிரம்பு எதிர் பார்த்த அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க வில்லை. அந்த ஆத்திரத்தில் அவர் ஈரான் மீது போர் தொடுக்க முயல்வார்.