உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீர்வாயத்தில் இன்று வினேஷ் போகத்திற்கு தீர்வு :வெள்ளி கிடைக்குமா ?

தீர்வாயத்தில் இன்று வினேஷ் போகத்திற்கு தீர்வு :வெள்ளி கிடைக்குமா ?

பாரிஸ் : தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து வினேஷ் போகத் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் செய்துள்ள மேல்முறையீடு நாளை (ஆக.09) விசாரணைக்கு வருகிறது.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 33வது ஒலிம்பிக் போட்டியின் மல்யுத்த போட்டியில் 'பிரீஸ்டைல்' 50 கிலோ பிரிவில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை வினேஷ் போகத், 29, முதல் சுற்றில் ஜப்பானின் யுய் சுசாகியை வீழ்த்தி, ஒலிம்பிக் மல்யுத்த பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் இருமுறை வீராங்கனைகளின் எடை சோதிக்கப்பட்ட போது வினேஷ் போகத்தின் எடை 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததால், சர்வதேச மல்யுத்த சங்கம் தகுதி நீக்கம் செய்தது.இதனால் வினேஷின் பதக்கம் வெல்லும் கனவு தகர்ந்தது. 140 கோடி இந்திய மக்களின் நெஞ்சமும் தகர்ந்தது. இந்நிலையில் தன்னை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து கோர்ட் ஆர்பிட்ரேசன் ஆப் ஸ்போர்ட்ஸ் எனப்படும் சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதன் மீது இன்று காலை அல்லது மதியம் (ஆக.09 ) தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இதில் தனக்கு வெள்ளி பதக்கம் வழங்கிட உத்தரவிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Parameswaran R
ஆக 11, 2024 05:53

Dinesh Pogat is already won more than Gold in the hearts of people. Those who put opinions against her is IN HUMAN HEARTLESS elements. I pity upon them.


Ramesh Sargam
ஆக 09, 2024 12:20

அப்படி ஒருவேளை வெள்ளி பதக்கம் கிடைத்தாலும், அது அந்த அளவு சந்தோஷத்தை கொடுக்காது. யாரும் மதிக்கவும் மாட்டார்கள்.


Swaminathan L
ஆக 09, 2024 11:58

தீர்ப்பாயம் இந்த விஷயத்தில் கருணை காண்பிப்பது சரியாக இருக்காது. பிற்காலத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக வேறு பல வீரர்களும் இது மாதிரியான முறையீடுகள் செய்து தீர்ப்பாயத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள். பரிசு வெல்லப்பட வைண்டும். அதுவே சரி, உண்மையான பெருமையும் கூட. கருணையால் கிடைப்பது பரிசாகாது. மேலும், 53 கிலோ பிரிவிலிருந்து 50 கிலோ பிரிவுக்கு மாறியவர் தன் உடல் எடையை 50 கிலோவுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. விதிகளின்படி அது தகுதியிழப்புக்கான காரணம் தான்.


Sivak
ஆக 09, 2024 10:57

பரிட்சையில் ஒரு மார்க் குறைந்தாலும் பெயில் தான்.. பஸ்ஸுல ஒரு ரூபாய் குறைவா குடுத்தாலும் டிக்கெட் குடுக்கமாட்டான் ... அதே ஒலிம்பிக்கில் நீளம் தாண்டுதல் உயரம் தாண்டுதல் ஓட்ட பந்தயம் கூட ஒரு அங்குலம் குறைவாக /அதிகமாவதை வைத்து தான் பரிசு வழங்கு படுகிறது... இங்கு எடை தகுதி பெற வில்லை .. எந்த குழப்பமும் இல்லை ... அதனால் பதக்கம் இல்லை ... எதற்காக இவ்வளவு அலப்பறை? இதே போல் இதற்க்கு முன்னர் மேரி கொம் குத்துச்சண்டையில் செய்த அலப்பறை உலகிற்கு தெரியும்... பெண்கள் என்பதாலா?


naray
ஆக 09, 2024 04:56

இவர் சும்மா புலம்புவதை நிறுத்த வேண்டும். விதிகளின் படி தான் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார் என்று ஒலிம்பிக் கமிட்டி கூறியுள்ளது.


தாமரை மலர்கிறது
ஆக 09, 2024 02:12

விளையாடாமல் கொல்லைபுறவழியாக பதக்கம் பெறலாமா என்று குறுக்கு வழியில் சிந்திக்க கூடாது. ஒலிம்பிக்கில் கோட்டாவில் பதக்கம் கிடைக்காது. அதனால் மௌனமாக வெளியேறி மானத்தோடு வெளியேவருவது நல்லது.


Sivak
ஆக 09, 2024 10:57

மிகவும் சரியான கருத்து


SRINIVASAN K
ஆக 09, 2024 01:53

Should be silver medal getting Sure God bless here


SRINIVASAN K
ஆக 09, 2024 01:51

Should be silver getting


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை