மேலும் செய்திகள்
யு.பி.எஸ்.சி., தேர்விலும் வருகிறது ஏ.ஐ.,
20-Sep-2025
விர்ஜீனியா: அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் 'சாட்ஜிபிடி' என்ற செயற்கை நுண்ணறிவு உதவியால் லாட்டரியில், 1.32 கோடி ரூபாய் பரிசு வென்ற வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. மாறி வரும் டிஜிட்டல் உலகில், கட்டுரைகள் எழுதுவது துவங்கி, நோய்களைக் கண்டறிவது வரை மக்கள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவில் பெண் ஒருவர், 'சாட்ஜிபிடி' எனப்படும் செயற்கை நுண்ணறிவில் இயங்கும் செயலியின் உதவியால், லாட்டரியில் பரிசை வென்றுள்ளார். விர்ஜீனியா மாகாணம் மிட்லோதியனில் வசித்து வருபவர் கேரி எட்வர்ட்ஸ். இவர் முதல் முறையாக ஆன்லைனில் லாட்டரி கேம் விளையாடி, தன் அதிர்ஷ்டத்தை சோதிக்க முடிவு செய்தார். இதற்காக சாட்ஜிபிடியின் உதவியை நாடினார். அது கூறியபடி விளையாடியதில், 1.32 கோடி ரூபாய் பரிசை வென்றுள்ளார். பரிசு விழுந்த செய்தி கிடைத்ததும் அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார். முழு பரிசுத் தொகையை யும் அவர் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கினார்.
20-Sep-2025