உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்: ஷர்வானிகா தங்கம்

உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்: ஷர்வானிகா தங்கம்

அல்மாட்டி: உலக 'கேடட்' செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார் ஷர்வானிகா. சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக்கான உலக 'கேடட்' சாம்பியன்ஷிப் தொடர் கஜகஸ்தானி ன் அல்மாட்டியில் நடந்தது. ஓபன், பெண்கள், 12, 10 வயது உட்பட 6 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. 88 நாடுகளில் இருந்து 842 பேர் பங்கேற்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=g8p9ucgd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதில் 10 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஷர்வானிகா, கியானா, திவி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழகத்தின் அரியலுாரை சேர்ந்த ஷர்வானிகா, முதல் போட்டியில் கஜகஸ்தானின் அடெலினாவிடம் தோல்வியடைந்தார். பின் சுதாரித்துக் கொண்ட ஷர் வானிகா, தொடர்ந்து 9 போட்டியில் வெற்றி பெற்றார். கடைசி போட்டியில் தோற்ற போதும் 9.0 புள்ளி பெற்றார். மங்கோலியாவின் சின்ஜோரிக், சீனாவின் ஜிஜின் தலா 9.0 புள்ளி பெற்றனர். இருப்பினும் 'டை பிரேக்கர்' புள்ளியில் முந்திய ஷர்வானிகா, முதலிடத்தை உறுதி செய்து சாம்பியன் ஆனார். கடந்த 2024 ல் அல்பேனியாவில் நடந்த உலக 'கேடட்' தொடரில் ரேபிட் பிரிவில் தங்கம், 'பிளிட்ஸ்' பிரிவில் வெள்ளி வென்றிருந்தார். 10 வயதுகுட்பட்ட ஓபன் பிரிவில் இந்தியாவின் சர்பர்தோ மணி, 8.5 புள்ளி எடுத்து, மூன்றாவது இடம் பிடித்து வெண்கலம் வசப்படுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

மணிமுருகன்
அக் 03, 2025 00:21

வாழ்த்துக்கள்


kavi
அக் 02, 2025 13:35

மென்மேலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்


KRISHNSWAMY MADIVANAN
அக் 02, 2025 11:40

Best Wishes for further Victories


Marivignesh
அக் 02, 2025 09:32

வாழ்த்துக்கள் !


Karthik
அக் 02, 2025 08:58

சுட்டி தங்கம் வாழ்நாளில் மென்மேலும் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்..


Dv Nanru
அக் 02, 2025 08:55

உலக கேடட் செஸ் சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள் மேன் மேலும் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற என்னுடைய வாழ்த்துக்கள் ...ஜெய் ஹிந்த் ....


Ramesh Sargam
அக் 02, 2025 08:48

தங்கம், வெண்கலம் வென்ற தங்கக்குட்டிகளுக்கு வாழ்த்துக்கள்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
அக் 02, 2025 08:21

வாழ்த்துக்கள் குட்டி பாப்பா .


முக்கிய வீடியோ