உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலக தலைவர்கள் பேச்சு: நாகரீகம் போச்சு!

உலக தலைவர்கள் பேச்சு: நாகரீகம் போச்சு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இப்போதெல்லாம் சில உலக தலைவர்களின் பேச்சு, அநாகரீகத்தின் உச்சமாகவும் தெருச் சண்டையைவிட கேவலமாகவும் இருக்கிறது. அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் மீண்டும் வந்த பிறகு உலக நாடுகளை குழாயடி சண்டைக்களமாக மாற்றி விட்டார்.முன்பெல்லாம் ஒரு நாடு செய்வது இன்னொரு நாட்டுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை ஐ.நா.,விடம் முறையிடுவார்கள். அல்லது தங்கள் வெளியுறவு துறை மூலம் நாகரீகமான வார்த்தைகளில் அறிக்கையாக தருவார்கள் அல்லது சம்மந்தப்பட்ட நாட்டின் துாதரை அழைத்து கண்டனம் தெரிவிப்பார்கள்.அந்தந்த நாட்டு அதிபர்களோ, பிரதமர்களோ நேரடியாக பிரச்னை பற்றி வாய் திறப்பது அரிது. ஆனால் அத்தனையையும் மாற்றி விட்டார் டிரம்ப்.தனக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக ‛‛ஈரான் நாட்டு தலைவர் கொலை செய்யப்படுவார்'' என்று பகிரங்கமாக அறிவிக்கிறார். இதைப் பார்த்து மற்ற தலைவர்களும் இதே போல பேசத் துவங்கி விட்டனர். வீட்டில் சூரிய குளியல் எடுக்கும்போது டிரம்ப்பை ட்ரோன் மூலம் கொலை செய்வது சுலபம் என்கிறார்'' ஈரான் நாட்டு தலைவர். பதிலுக்கு ‛‛ஈரான் நட்டு தலைவர் கொல்லப்படுவார்'' என்று பீதியை கிளப்புகிறார் இஸ்ரேல் பிரதமர்.அதோடு நின்றாரா ட்ரம்ப். ‛‛இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால் வரியை பல மடங்கு உயர்த்துவோம். என்னால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்'' என்று மிரட்டுகிறார். சொந்தமாக மல்யுத்த சண்டை அணியை (WWF) நடத்தி வந்ததாலோ என்னவோ, அந்த போட்டிகளில் கலந்துகொள்வோர் பேசுவது போலவே, உலக நாடுகளையும் பேசுகிறார்.இவர்களைப் பார்க்கும்போது நமது இந்திய தலைவர்கள் எவ்வளவோ பரவாயில்லை. பாகிஸ்தானுடன் ஆயிரம் பிரச்னை இருந்தாலும், அந்நாட்டு பிரதமரை கொலை செய்வோம், கழுத்தறுப்போம் என்றெல்லாம் நமது தலைவர்கள் பேசுவதில்லை. நாகரீகமான சமுதாயம், தனி மனித உரிமை, முழு கல்வி அறிவு பெற்றவர்கள் என்றெல்லாம் பீற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகள், நாகரீகத்தில் இந்தியாவை விட கீழான நிலையில் இருக்கின்றன என்பது தான் நிதர்சனம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ManiK
ஜூலை 12, 2025 14:05

ட்ரம்ப் 2.0 எதிரி நாடுகளை பந்தாட ஆரம்பித்து இப்போது உலகத்தையே எதிரியாக பார்க்கிறது. பாகிஸ்தான் போன்ற கேடுகெட்ட நாடுகளை நண்பனாக பார்ப்பது அவலத்தின் உச்சம்.


kannan
ஜூலை 12, 2025 13:16

இன்னொரு கட்சியை மறந்துவிட்டீர்களா? எப்போதும் நாக்கை அறு, தலைக்கு விலை, தேர்தல் போது இன்னொரு மாநில மக்களை திருடர்கள் போல சித்தரிப்பது சொல்லும் கட்சி அநாகரீகத்தில் முனைவர் பட்டங்கள் பெற்றவர் கள் ஆயிற்றே ராமதாஸ் வீட்டில் ரகசிய ஒட்டுக் கேட்புக் கருவி லண்டனில் இருந்து வாங்கிவந்து வைத்தவர்கள்.. ‘லண்டன்’- ஒரு முக்கியமான துப்பு…


Santhakumar Srinivasalu
ஜூலை 12, 2025 13:11

பெரியண்ணன் என்கிற நினைப்புடன் பேசும் ரவுடி ராஜா அதிபர். அமெரிக்க ஐனங்கள் ஓட்டு போட்ட காரணத்தால் அந்த நாட்டு மதிப்பையே கேவலப்படுத்தி கிறார்!


K V Ramadoss
ஜூலை 12, 2025 12:50

டிராம்போட பின்னணி அப்படி.. நம் நாட்டு படிப்பறிவு அற்ற கீழ்மட்ட அரசியல்வாதிகள் போல டிரம்பும். ..தில் விசித்திரம் என்ன வென்றால் அமெரிக்கர்களின் பெரும்பானவர்கள் அதை ரசிக்கிறார்கள்..ஆதரிக்கிறார்கள் ..அதனால் டிரம்ப் மேன்மேலும் அதேமாதிரி பேசுகிறார். ..நம் நாட்டில் ஒரு நல்ல குணம் என்ன வென்றால் அதிரடியாக பேசுபவர்களுக்கு எதிர்ப்பும் கிளம்பும்... அதிசயமாக அமெரிக்கர்களின் அறிவுடையவர்கள்கூட டிரம்பின் பேசசுக்கு எதிர்ப்பு காண்பிப்பதில்லை... டிரம்பிடம் ஒருவிதமான பயம் அவர்கள் எல்லோரிடமும் இருக்கிறது..


Ramesh Sargam
ஜூலை 12, 2025 12:29

இந்தியாவிலும் ஒருசில டிரம்ப் போன்று, ஈரான் நாட்டு தலைவர் போன்று அநாகரீகமாக பேசக்கூடியவர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு சிலர் காங்கிரஸ், திமுக போன்ற அணியில் உள்ளனர்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை