உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உலகின் முதல் பறக்கும் கார்: சீனாவில் அறிமுகம்: விலை ரூ.1.15 கோடி மட்டுமே!

உலகின் முதல் பறக்கும் கார்: சீனாவில் அறிமுகம்: விலை ரூ.1.15 கோடி மட்டுமே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: உலகின் முதல் பறக்கும் காரை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி என்கின்றனர்.இன்றைய சூழலில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனத்தில் செல்வதற்குள் போதும்போதும் என்ற நிலைக்கு சென்றுவிடுகிறோம். காரணம், பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையால் நெரிசல் அதிகரித்து, பயணத்தை தாமதப்படுத்துவதுடன், சலிப்படைய செய்கிறது. பயணத்தை எளிதாக்கும் வகையில், பறக்கும் காரை வடிவமைக்க உலகின் பல்வேறு நிறுவனங்கள் போட்டிப்போட்டு வருகின்றன. அந்த போட்டியில் தற்போது சீனா முந்தியுள்ளது. சீனாவின் தொழில்நுட்ப மற்றும் மோட்டார் வாகன தயாரிப்பு நிறுவனமான 'எக்ஸ்பெங்', உலகிலேயே முதல் பறக்கும் பேட்டரி காரை தயாரித்துள்ளது.இதற்கான சோதனை ஓட்டத்தை 2022ம் ஆண்டு துபாயில் நடத்தி வெற்றிப்பெற்றது. ஹெலிகாப்டரின் தொழில்நுட்பத்தில், கார் போன்ற வடிவத்தில் இந்த பறக்கும் இந்த காருக்கு எக்ஸ்பெங், 'எக்ஸ்2' என பெயரிடப்பட்டுள்ளது. 5.172 மீட்டர் நீளமும், 5.124 மீட்டர் அகலமும், 1.362 மீட்டர் உயரமும் கொண்ட இந்த கார், 680 கிலோ எடைக்கொண்டது. அதிகபட்சம் 160 கிலோகிராம் எடையை தாங்கி பறக்கக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.1.15 கோடி இருக்கும் என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ராமகிருஷ்ணன்
ஜூன் 18, 2024 17:17

சீன தயாரிப்பை நம்பி ஏமாற மாட்டார்கள். பணம் வீணாக போயிடும் இந்த விளம்பர சமையல் கருவிகள் போல வீட்டிற்கு வந்தால் வேலை செய்யாது.


Pandi Muni
ஜூன் 18, 2024 17:13

ராகுல வச்சி டெஸ்டிங் விடலாமே


என்றும் இந்தியன்
ஜூன் 18, 2024 17:07

அப்போ சாலையில் ஒழுங்குமுறை மாதிரி வானத்தில் எந்த வழியில் செல்ல அனுமதி என்று சட்டம் உள்ளதா???என்ன உயரத்திற்கு இது பறக்கும். அதனால் ஏர்போர்ட் அருகில் விமானங்களுடன் இது விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அதன் சட்டம் என்ன???இது பழக்கத்திற்கு வருமுன் சட்டம் இயற்றப்படவேண்டும்


சூ சின் வான், பீஜிங், சீனா
ஜூன் 18, 2024 15:36

சூப்பர். இனிமே ரோடே தேவையில்லை. மேலேயே மோதிக்கலாம்.


KayD
ஜூன் 18, 2024 17:02

உண்மை தான் .மேல மோதி கீழே சும்மா போறவங்க தலையில் கார் 650 kg plus 2 160 kg weight இருக்கும் பயணிகள் விழும். பல பறக்கும் வண்டிகள் மோதினால் என்ன ஆகும் ஷங்கர் அடுத்த படத்துக்கு கிளைமாக்ஸ் காட்சி போல தான் இருக்கும்


Saai Sundharamurthy AVK
ஜூன் 18, 2024 15:33

இந்த கார் நடைமுறைக்கு வந்தால் கொள்ளைக் கார்களுக்கும், திருடர்களுக்கும் மிக வசதியாகப் போய் விடும். காவல்துறை என்ன செய்யும் என்று தெரியவில்லை ???


KayD
ஜூன் 18, 2024 16:58

நீங்கள் சொல்றது சரி தான். போலீஸ் கூட பறக்கும் கார் வைத்து இருப்பார்கள் ..ஆனால் தேவை படும் பொது take off ஆகாது.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை