உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு: 2 மணி நேர பயணம் 2 நிமிடமானது

சீனாவில் உலகின் மிக உயரமான பாலம் திறப்பு: 2 மணி நேர பயணம் 2 நிமிடமானது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்:உலகின் மிக உயரமான பாலம் சீனாவின் தென்மேற்கு குய்ஷோ மாகாணத்தில் திறக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் தென்மேற்கில் உள்ள குய்ஷோ மாகாணத்தில் 'ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன்' என்ற பெயரில் உலகின் மிக உயரமான பாலம் திறக்கப்பட்டுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=iprnoho2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இப்பாலம், ஆற்றின் மேற்பரப்பிலிருந்து, 2,051 அடி உயரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இரு மலைகளுக்கு இடையே 4,658 அடி நீளத்தில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனை கட்டி முடிக்க மூன்றாண்டுகளுக்கு மேலானது என்றும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, மிக உயரமான பாலம் என, பெயர் பெற்ற அப்பகுதியில் உள்ள பெய்பன்ஜியாங் பாலத்தின் 1,854 அடி உயரத்தை, இந்த புதிய பாலம் முந்தியுள்ளது. ஹுவாஜியாங் கிராண்டு கேன்யன் பாலம் திறக்கப்பட்டதன் வாயிலாக, இரு பகுதிகளுக்கு இடையேயான பயண நேரம் இரண்டு மணி நேரத்தில் இருந்து இரண்டு நிமிடங்களாக குறைந்துள்ளதாக அம்மாகாணத்தின் போக்குவரத்து துறை தலைவர் ஜாங் யின் தெரிவித்து உள்ளார். ஏற்கனவே, ஆயிரக் கணக்கான பாலங்களைக் கொண்ட மலைப்பாங்கான மாகாணமான குய்ஷோ, இப்போது உலகின் இரண்டு உயரமான பாலங்களை கொண்டு பெருமையடைகிறது. உலகின் 100 உயரமான பாலங்களில் கிட்டத்தட்ட பாதி, சீனாவின் குய்ஷோ மாகாணத்தில் அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

KOVAIKARAN
செப் 29, 2025 18:27

இங்கே இரண்டு மலைகளை இணைக்கும் உலகத்திலேயே உயர்ந்த பாலம் காட்டியது சீன அரசுதான். அங்குள்ள மாநில அரசுகளில்லை. இங்கே நமது நாட்டிலும் அதுபோன்ற பாலம் கட்டுவதென்றால் மத்திய அரசுதான் அவ்வளவு நிதி செலவு செய்து கட்டமுடியும். நம்போன்ற தினமலர் வாசகர்களுக்கு ஊழல் அரசு திமுக பிடிக்கவில்லையென்றாலும், இது போன்ற செய்திகளில், அவர்கள் இவ்வாறு செய்வார்கள், அவ்வாறு செய்வார்கள், என்று மோசமான கருத்துக்களை பதிவதில் எனக்கு உடன்பாடில்லை. மிக்க புத்திசாலிகளான, தேசப்பற்று கொண்டுள்ள, தினமலர் வாசக நண்பர்களே, நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும், வடகிழக்கு மாநிலங்களில், உள்ள மலைப்பகுதிகளிலும், இதேபோன்ற பல பாலங்கள் கட்டப்பட வேண்டும், அதனால் அங்கேயுள்ள மாநிலமக்களின் வாழ்வாதாரம் உயரும், என்று பலவாறாக நல்ல பல கருத்துக்களை பதிவிடலாம். நம்முடைய சிந்தனைகள் எப்போதுமே நல்லதை நினைப்பதும், நாட்டின் வளர்ச்சி, நமது வளர்ச்சி என்ற ஒரு நல்ல சித்தாந்தங்களையும் கொண்டு, நமக்கு நடுநிலையாக நல்ல பல செய்திகளை வெளியிடும், பொன்விழாவினை நோக்கி வெற்றி நடைபோட்டு, வேகமாகச் செல்லும், நமது தினமலருக்கு பெருமை தேடித் தாருங்கள் என்று உங்களை அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.


djivagane
செப் 29, 2025 13:22

இந்தியாவில் லஞ்செம் இல்லயேல் ஒன்னும் செய்யமுடியாது


பாமரன்
செப் 29, 2025 09:28

இந்த சப்பமூக்கன்க கட்டுறதைதான் குடுகுடுன்னு பண்றானுவன்னா தொறந்து விடறதுக்கு கூட அப்படியா..


VenuKopal,S
செப் 29, 2025 08:31

அப்டியே கீழே விழுந்தவர்களுக்கு தலா 10 லட்சம் குடுத்து ஓட்டு சேர்க்கை நடத்தும். அரசியல் செய்யாமல் அவியலா செய்வார்கள் என ஒரு அறிக்கை துண்டு சீட்டில் வாசிக்கும்


தியாகு
செப் 29, 2025 07:04

ஒருவேளை இந்த பாலத்தை கட்டுமர திருட்டு திமுகக்காரன் காண்ட்ராக்ட் எடுத்து கட்டியிருந்தால் எப்படி இருந்திருக்கும்? இரண்டு நிமிடம் என்று பெருமைப்படுவதற்கு பதில் வெறும் இரண்டு மாதங்களில் பாலம் ஒன்றும் இல்லாமல் இடிந்துபோயிருக்கும். ஹி...ஹி...ஹி...


Naga Subramanian
செப் 29, 2025 07:53

ஒருவேளை கட்டுமரம் கட்டியிருந்தால், இரண்டே நிமிடத்தில் நாம் கடப்பதற்கு முன்பாக, பாலம் முந்திச் சென்றிருக்கும்.


Gokul Krishnan
செப் 29, 2025 08:15

அதை போல் இந்த பாலத்தை பீகார் முதல்வரின் ஐக்கிய ஜனதா தள அரசு கட்டி இருந்தால் எப்படி இருக்கும்


MUTHU
செப் 29, 2025 12:47

அதற்கு முன்பாகவே நான்கு முறை கட்டியதற்கு கணக்கு காட்டப்பட்டு ஆட்டை போடப்பட்டிருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை