உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

புதுடில்லி: கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.கனடாவின் பிரம்ப்டன் நகரில் ஹிந்து கோவில் உள்ளது. இப்பகுதியில் இந்திய தூதரக அதிகாரிகள் முகாம் அலுவலகம் அமைத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோவிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கையில் இருந்த கொடிக்கம்பத்தை வைத்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=60pe4kd4&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த வன்முறையை அரங்கேற்றி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய சம்பவம். இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என கனடா அரசை வலியுறுத்துகிறோம். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலை உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

கோழைத்தனமானது

பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், கனடாவில் ஹிந்து கோவிலில் நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். நமது தூதரக அதிகாரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் பயங்கரமானது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒரு போதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம் எனக்கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

சாண்டில்யன்
நவ 05, 2024 17:57

கொத்து கொத்தா கொன்னாங்கன்னு இங்கே ஒரு கூப்பாடு நாற்பதாண்டு கடந்துபோன ஒரு சம்பவத்துக்கு சமீபத்தில் பழிவாங்குவதற்காக ஒரு மறைமுக போர் தொடுத்த அங்கே ஒரு நிலைப்பாடு எமக்குத் தேவை கலவரம் இதுவும் யாழ்ப்பாண போர் மாதிரிதான்


அப்பாவி
நவ 05, 2024 07:04

மணிப்பூரில் நடந்த போது ரயில்ல உக்ரைன் போயிட்டாரு


SIVA
நவ 05, 2024 02:52

நீங்கள் சொல்பது அனைத்தும் சாரியானவைஉலக இந்துக்கள் மொழியால் வேறுபட்டாலும் மதத்தினால் ஒன்றுமயை உலகமக்களிற்கு எடுத்துரைக்கவேண்டும், நாங்கள் அந்த ஈஸ்வரனின் சிவனின் பிள்ளைகள் என்பதை பிரதிபலிக்கவேண்டும். ஹிந்துக்கள் மீது பங்களாதேஷில் தாக்குதல். பாகிஸ்தானில் தாக்குதல். ஏன் இந்தியாவிலேயே பல மாநிலங்களில் தாக்குதல். குறிப்பாக தமிழ் நாட்டில் கூட. மற்றும் ஸ்ரீலங்காவில் கட தமிழ் இந்துக்கள் மீதும், சிவஆலங்களிலும் தாக்குதல், கோவில்கள் மீதும் தாக்குதல் இதை மறந்துவிடடீர்களா ???? ஏன் இந்த வெறித்தாக்குதல் ஹிந்துக்கள் மீது? பொதுவாக ஹிந்துக்கள் அமைதியான, அஹிம்சா வழியில் செல்பவர்கள். சிவனே, நாராயணா,அப்பனே முருகா ஐயப்ப சுவாமியே என்று தரிசனம் செய்பவர்கள் . ஏன் இந்த அநாகரிக தாக்குதல்கள், இந்துக்கள் தாக்குதல்களை எதிர்த்துபேசமாட்டார்கள் ,அந்த நல்ல குணத்தை பயன்படுத்தி அவர்கள் எப்பவும் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இனி ஹிந்துக்கள் அப்படி இருக்கக்கூடாது. ஒற்றுமையுடன் அவர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்கவேண்டும். சாது நினைத்தால் காடு கொள்ளாது என்பதின் அர்த்தத்தை அவர்கள் எதிரிகளுக்கு காட்டவேண்டும். அதற்கு மிக மிக தேவை ஒற்றுமை. ஹிந்துக்களே ஒற்றுமையுடன், உங்களை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். கனடாவில் அதிகளவு இந்துக்கள் வாழ்கிறார்கள் இவர்களின் ஒற்றுமை எங்கேபோய்விட்டது , இனி உலக இந்துக்களை திருச்செந்தூர் முருகன் காப்பாற்றவேண்டும்,ஜெய் ஸ்ரீ ராம்,, ஓம் சிவாய நமக , திருப்பதி ஏழுமலையானின் ஆசியும் இவர்களை காக்கவேண்டும்.


T.sthivinayagam
நவ 04, 2024 22:06

ஆமாம் இதெல்லாம் ஏன் செய்ரால் யார் செய்றது


கிஜன்
நவ 04, 2024 21:41

கண்டனம் ....வெளிநாட்டு சீக்கியர்கள் நன்றாக மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கிறார்கள் ....


சாண்டில்யன்
நவ 04, 2024 21:24

இத்தனை காலமும் இல்லாமல் ஏனிந்த நிலை எப்போது இந்த இன கலவரம் ஆரம்பமானது தெரிஞ்சவங்க சொல்ல மாட்டாங்க


அப்பாவி
நவ 04, 2024 21:17

இந்தியர்களை இந்தியாவில் வாழணும்னு கூட்டிட்டு வந்துரணும்.


KayD
நவ 04, 2024 21:17

செய்தி மிகவும் மனதை பாதிக்குது. அவுங்க அவுங்க மதம் அவுங்க அவுங்க நம்பிக்கை அவர்களுக்கு சிறந்தது . அதே சமயம் நாங்கள் தான் சிறந்தவர்கள் மற்றவர்கள் சரி இல்லை என்று சொல்லும்போது நீங்களே உங்கள் நம்பைக்கையை தாழ்த்தி கொள்ளுகிறோம். மற்றவர்கள் மத நம்பிக்கையை களங்கம் பண்ணாமல் இகழ்ந்து பேசாமல் இருந்தால் நம்ப நம்பிக்கை சிறந்து விளங்கும். விலங்குகள் கூட அது இயற்கை படி அது தன்னோட உணவுக்காக மட்டும் தான் அடுத்த ஒரு விலங்கை கொல்லும் . ஆறு அறிவு படைத்த மனிதன் மதம் பேரில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டால் எந்த கடவுளும் எந்த மதத்தையும் காப்பாற்ற மாட்டார்கள். இப்படி கீழ் தரமா நடந்து கொண்ட நபர்களை அடையாளம் கண்டு ஒரு சரியனா தீர்ப்பை அரசாங்கம் தரும் என்று நம்புவோம். கத்தி எடுத்தவன் கத்தியால் தான் மரணம் அடைவான் னு நம்பிக்கை உண்டு,.


Chandramohan
நவ 04, 2024 20:41

சீக்கிய சகோதரர்கள் தங்களது குரு கோவிந்த் சிங்கின் அறிவுரை மற்றும் வீர வழி காட்டுதலை மறந்து... இஸ்லாத்தினரின் கொடுமைகளை மறந்து.... யாரை எதிர்க்க குரு கோயிந்த் சிங் பயிற்றுவித்தார் என்பதையும் மறந்து... பாகிஸ்தான் கைக்கூலிகளின் பேச்சை கேட்டு இந்தியாவிற்கு எதிராக திரும்புவது வேதனை.... இது வெளிநாட்டில் இருந்து கொண்டு நாட்டை துண்டாட நினைக்கும் மூளைச் சலவைக்கு உள்ளான சீக்கியர்களுக்கான பதிவு...


Ramesh Sargam
நவ 04, 2024 20:09

ஹிந்துக்கள் மீது பங்களாதேஷில் தாக்குதல். பாகிஸ்தானில் தாக்குதல். ஏன் இந்தியாவிலேயே பல மாநிலங்களில் தாக்குதல். குறிப்பாக தமிழ் நாட்டில் கூட. ஏன் இந்த வெறித்தாக்குதல் ஹிந்துக்கள் மீது? பொதுவாக ஹிந்துக்கள் அமைதியான, அஹிம்சா வழியில் செல்பவர்கள். சிவனே, நாராயணா என்று செல்பவர்கள். எதிர்த்துபேசமாட்டார்கள். அந்த நல்ல குணத்தை பயன்படுத்தி அவர்கள் எப்பவும் தாக்கப்படுகிறார்கள். ஆனால் இனி ஹிந்துக்கள் அப்படி இருக்கக்கூடாது. ஒற்றுமையுடன் அவர்களை எதிர்ப்பவர்களை எதிர்க்கவேண்டும். சாது நினைத்தால் காடு கொள்ளாது என்பதின் அர்த்தத்தை அவர்கள் எதிரிகளுக்கு காட்டவேண்டும். அதற்கு மிக மிக தேவை ஒற்றுமை. ஹிந்துக்களே ஒற்றுமையுடன், உங்களை எதிர்ப்பவர்களுக்கு பாடம் புகட்டுங்கள். ஜெய் ஸ்ரீ ராம்.