மேலும் செய்திகள்
காதலியை கொன்ற கயவனுக்கு மரண தண்டனை!
31-Dec-2024
புதுடில்லி,கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கேரளாவைச் சேர்ந்த நர்ஸ் நிமிஷா பிரியாவின், மரண தண்டனையை நிறைவேற்ற ஏமன் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். தண்டனையில் இருந்து காப்பாற்றுவதற்கான கடைசி கட்ட முயற்சிகள் நடக்கின்றன.கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 36. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார். கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். அந்த ஆண்டில் ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.இந்நிலையில், ஏமனில் சொந்தமாக கிளினிக் துவங்க, நிமிஷா 2015ல் திட்டமிட்டார். அந்த நாட்டின் சட்டங்களின்படி, உள்நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே, கிளினிக் உட்பட எந்த தொழிலையும் துவங்க முடியும். இந்த நேரத்தில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்டோ மெஹ்டி என்பவருடன் இணைந்து நிமிஷா தனியாக கிளினிக் துவக்கினார்.ஆனால், அந்த கிளினிக்கால் கிடைத்த வருவாய் அனைத்தையும் மெஹ்டி எடுத்துக் கொண்டார். இதைத் தவிர, நிமிஷாவின் திருமண புகைப்படத்தை திருத்தி, தன் படத்தை சேர்த்து, தனக்கும் நிமிஷாவுக்கும் திருமணம் நடந்ததுபோல் மெஹ்டி மாற்றியுள்ளார். இதைக் காட்டி நிமிஷாவை அவர் மிரட்டி வந்துள்ளார். மேலும் நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டார்.பாலியல் ரீதியாகவும், நிமிஷாவுக்கு அவர் தொந்தரவு கொடுத்துள்ளார்.இந்த பிரச்னைகளில் இருந்து விடுபட்டு, பாஸ்போர்ட்டை மீட்டு, நாடு திரும்புவதற்கு நிமிஷா திட்டமிட்டார். இதற்காக, மெஹ்டிக்கு மயக்க மருந்தை ஊசி வாயிலாக செலுத்தியுள்ளார் நிமிஷா. ஆனால், மருந்து அதிகமாக இருந்ததால், மெஹ்டி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதை விசாரித்த அந்நாட்டின் நீதிமன்றங்கள், அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தன. இதையடுத்து, அந்த நாட்டின் அதிபர் ரஷீத் அல் - அய்மிக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. தற்போது அது நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு மாதத்துக்குள் மரண தண்டனையை நிறைவேற்றும்படி அதிபர் உத்தரவிட்டுள்ளார்.மரண தண்டனையில் இருந்து தன் மகளை மீட்பதற்காக, நிமிஷாவின் தாய் பிரேம குமாரி, கடந்த ஓராண்டாக ஏமனில் தங்கியிருந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.அந்த நாட்டின் சட்டங்களின்படி, கொலை வழக்கில் உயிரிழந்தவரின் குடும்பம் மற்றும் அவர்கள் சார்ந்த பழங்குடியினம் மன்னிப்பு அளித்தால், குற்றஞ்சாட்டப்பட்டவர் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியும். இதற்காக, உயிரிழந்தவரின் குடும்பம் கோரும் தொகையை கொடுக்க வேண்டும். இந்த கடைசி வாய்ப்பை பயன்படுத்தும் முயற்சி நடந்து வருகிறது.
இது தொடர்பாக, நம் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:நர்ஸ் நிமிஷா பிரியாவை தண்டனையில் இருந்து தப்பிக்க வைக்க தேவையான அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இந்த விஷயத்தில் அவருடைய குடும்பத்தாருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
31-Dec-2024