உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆம், அவரால் முடியும்; கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்; கட்சி மாநாட்டில் முழங்கினார் ஒபாமா

ஆம், அவரால் முடியும்; கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார்; கட்சி மாநாட்டில் முழங்கினார் ஒபாமா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: 'ஆம், அவரால் முடியும். டிரம்பை கமலா வெற்றி கொள்வார். அமெரிக்காவின் தலைசிறந்த அதிபராக கமலா ஹாரிஸ் இருப்பார்' என, ஜனநாயகக்கட்சி மாநாட்டில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா பேசினார்.அமெரிக்காவில், நவ., 5ல் அதிபர் தேர்தல் நடக்கிறது. குடியரசு கட்சி சார்பில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ் களம் இறங்குகிறார். சிகாகோவில் நடந்த, ஜனநாயக கட்சி மாநாட்டில் கலந்து கொண்ட முன்னாள் அதிபர் ஒபாமா, கமலாவுக்கு ஆதரவு தெரிவித்தார். மாநாட்டில் பேசிய ஒபாமா பேசியதாவது:

பாராட்டு

ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் டிம் வால்ஸ் ஆகியோர் தொழிலாளர் நலனுக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்கள். கமலா ஹாரிசால் புதிய அத்தியாயத்தை உருவாக்க முடியும். ஜனநாயக கட்சியினருக்கு வேலை இன்னும் முடியவில்லை. கமலா ஹாரிசின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். நாட்டின் தலைசிறந்த அதிபராக அவர் திகழ்வார். அமெரிக்கர்களின் எதிர்காலத்திற்காக ஓட்டளிக்க வேண்டும். கமலாவிடம் தோற்று விடுமோ என்ற பயத்தில் டிரம்ப் உள்ளார்.

எனது நண்பர்

ஜோ பைடனை எனது ஜனாதிபதி என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அரசியலில் மிகவும் அரிதான காரியத்தைச் செய்யும் தன்னலமற்றவர். நாட்டின் நலனுக்காக தனது சொந்த லட்சியத்தை ஒதுக்கி வைத்தவர்.பெரிய ஆபத்து நேரத்தில் ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு தலைசிறந்த ஜனாதிபதியாக ஜோ பைடனை வரலாறு நினைவு கூரும். அவரை எனது நண்பர் என்று அழைப்பதிலும் பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kumar Kumzi
ஆக 21, 2024 14:04

கமலா ஹரீஸ் இந்திய எதிர்ப்பாளர் வெற்றி பெற்றால் இந்தியாவுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்துவார்


ஆரூர் ரங்
ஆக 21, 2024 11:59

கமலா வென்றால் நாட்டின் கடைசி ஜனாதிபதியாக இருப்பார். தனக்கு மட்டும் ஜனநாயகமும் பிற நாடுகளில் சர்வாதிகாரமும் நிலைக்க நினைக்கும் நாடு அழிவையே சந்திக்கும். கெடுவான் கேடு நினைப்பான்.


Columbus
ஆக 21, 2024 11:54

Kamala Harris is a puppet in the hands of leftist deep state led by Barak Obama and the arms lobby. Bad for USA, India and the World.


வைகுண்டேஸ்வரன்
ஆக 21, 2024 11:40

திராவிட மாடல் திட்டங்கள் அறிவித்திருக்கிறார். நியூ பார்ன் பேபிக்கு, அதாவது புதிதாய்ப் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பேரிலும் 6000 டாலர்கள் வழங்கப்படும் - என்று கமலா ஹாரிஸ் சொல்லி ஓட்டு கேக்கறார்.


TSRSethu
ஆக 21, 2024 10:40

If Trump wins it is good for Americans. If Kamala wins it is good for migrants. This is how votebank politics affect the American people ?


veeramani
ஆக 21, 2024 10:37

இந்திய வம்சாவளியினர் கமலா ஹாரிஸ் அமெரிக்க ராஷ்டிரபதியாக இந்தியர்களின் சார்பில் பிள்ளையார்பட்டி கற்பகவிநாகரிடம் பிரார்த்தனை செய்வோம்


வைகுண்டேஸ்வரன்
ஆக 21, 2024 12:26

பிரார்த்தனை பண்ணினாலும் கமலா ஹாரிஸ் ஜெயிச்சதும், இந்தியர்களுக்கு அமெரிக்கா போக விமான டிக்கெட் டில் 50% தள்ளுபடி, பெட்ரோல் விலையில் 69% தள்ளுபடி Crazy guys


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை