உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீங்களும் தான் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கிறீர்கள் அமெரிக்காவுக்கு சீனா சூடு

நீங்களும் தான் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்கிறீர்கள் அமெரிக்காவுக்கு சீனா சூடு

பீஜிங்:“அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உட்பட பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, எங்கள் நாட்டு நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளில் தலையிடக் கூடாது,” என, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்தார். ஐ.நா., பொது சபை கூட்டத்தில் நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உரையாற்றினார். அதில், ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதன் மூலம் இந்தியாவும் சீனாவும் உக்ரைன் போருக்கு நிதியளிப்பதாக குற்றம்சாட்டினார். 'ஐரோப்பிய நாடுகள் கூட ரஷ்ய எரிசக்தி பொருட்கள் வாங்குவதை நிறுத்தவில்லை. தங்களுக்கு எதிரான போருக்கு அவர்களே நிதியளிக்கின்றனர்' என்று குற்றஞ்சாட்டி இருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில் சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் நேற்று கூறியுள்ளதாவது: அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகின்றன. எனவே, எங்கள் நாட்டு நிறுவனங்களின் சாதாரண வர்த்தக நடவடிக்கைகளில் அவர்கள் தலையிடக் கூடாது. சீனா எப்போதும் உக்ரைன் பிரச்னையில் நேர்மையான, நீதி சார்ந்த நிலைப்பாட்டையே எடுத்துள்ளது. அமைதி பேச்சை தொடர்ந்து கோரி வருகிறோம். எங்கள் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ