உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வலுக்கிறது இளம் தலைமுறையினர் போராட்டம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. உலகெங்கும் உள்ள இளம் தலைமுறையினர், தங்கள் நாடுகளில் நடந்து வரும் அவலங்களுக்கு எதிராக குரல் கொடுக்க துவங்கியுள்ளனர். நம் அண்டை நாடுகளான வங்கதேசம், நேபாளம், இலங்கையில் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டங்கள் அரசை ஆட்டம் காண வைத்ததுடன், ஆளும் முக்கிய தலைவர்களை நாட்டை விட்டே வெளியேற வழி செய்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=b6wruwtg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல ஐரோப்பிய நாடுகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்தன. இதன் தொடர்ச்சியாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானிலும் தற்போது இளைஞர்களின் எழுச்சி துவங்கியுள்ளது. பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தான் தற்போது இத்தகைய சூழல் நிலவி வருகிறது. ஏற்கனவே, விலைவாசி உயர்வு, கோதுமைக்கான மானியம், மின்சாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து இப்பகுதி மக்கள், அரசுக்கு எதிராக போராட்டங்கள், வன்முறைகள் நிகழ்ந்தன. போராட்டக்காரர்களிடம் அரசு பேச்சு நடத்தியதைத் தொடர்ந்து அப்போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டு இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மீண்டும் போராட்டங்கள் வெடித்துள்ளன. தற்போது, அந்நாட்டு அரசுக்கு எதிராக இளம் தலைமுறையினர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்குள்ள மாணவர்களுக்காக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில், மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண்கள் குறைவாக வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. எதிர்பாராத அளவுக்கு மதிப்பெண்கள் குறைந்ததையடுத்து, புதிய மதிப்பீட்டு முறையில் குறைபாடு இருப்பதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும், முசாபராபாதில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் உயர்வு, தேர்வுகளில் தோல்வி அடைந்த அல்லது குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், ஒரு தாளுக்கு 1,500 ரூபாய் என கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான முறையில் துவங்கப்பட்ட இப்போராட்டம், ஒரு மாணவர் மீது அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக மாறியது. ஆத்திரமடைந்த மாணவர்கள் டயர்களை எரித்து பாகிஸ்தான் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். கல்வி கட்டண உயர்வுக்காக துவங்கிய மாணவர்கள் போராட்டம், தற்போது மோசமான உட்கட்டமைப்பு, சுகாதார பராமரிப்பின்மை மற்றும் போக்குவரத்து வசதியின்மை உள்ளிட்ட அடிப்படை நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிரான போராட்டங்களாக மாணவர்கள் மறுவடிவமைப்பு செய்துள்ளனர். மொத்தத்தில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மாணவர்கள் பொருளாதார சுமை மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிராக போராடுவதன் வாயிலாக, தங்கள் பிராந்தியத்தின் எதிர்காலம் குறித்து பாகிஸ்தான் நிர்வாகத்துக்கு கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளனர் என்பது இதன் வாயிலாக தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Sivasankaran Kannan
நவ 07, 2025 08:48

இந்த போலி நாதாரிகள் சொந்த பெயர் இல்லாமல், இது போல இந்தியன், ஜெய்ஹிந் என்று போலி பெயரில் வந்து அரசுக்கு எதிராக கருத்து வெளியிட்டு 200 ரூபாய் சம்பாதிக்கும் கூட்டம். இந்த கூட்டத்தின் பின்புலத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.. யார் இவர்களுக்கு 200 தருகிறார்கள் என்று .. இவர்கள் அடிமைகள் - இவர்கள் முதலாளிகள் மோசமானவர்கள்.


venukopal, S
நவ 07, 2025 10:51

ஆம் சிவ சங்கரன். இந்த துரோகிகள் ஆபத்தானவர்கள். இவர்கள் கொடூரமாக தண்டிக்க பட வேண்டியவர்கள். தாய் நாட்டை காட்டி குடுக்கும் விஷ ஜந்துக்கள். நசுக்க பட வேண்டியவர்கள்


Barakat Ali
நவ 07, 2025 08:18

பாகிஸ்தானியர்கள் இதனை ஆசாதி கஷ்மீர் [விடுதலை அடைந்த கஷ்மீர்] என்று அழைக்கிறார்கள். அப்படிப்பட்ட பகுதிக்கே இந்த நிலைமை ....


karupanasamy
நவ 07, 2025 07:57

எதுக்கு இங்க கஷ்டப்பட்டுஇருக்குற கெளம்பு பாகிஸ்தானுக்கு.


T.Senthilsigamani
நவ 07, 2025 07:55

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைய தலைமுறையினர் போராடிய போராட்டத்தை யாரும் துப்பாக்கியால் சுட்டு கலைக்கவில்லை. ஈராக் போரில் அமெரிக்காவை எதிர்த்து சென்னை அண்ணா சாலையில் ஊர்வலம் நடத்தியதை யாரும் தடை செய்ய வில்லை. பாகிஸ்தானுக்கு பலுசுஸ்தான் போராட்டங்கள் ,ஆப்கானிஸ்தான் தாக்குதல் மற்றும் இப்போது ஆக்கிரமிப்பு காஷ்மீர் கலவரம் என நாலாபுறமும் பிரச்சனைகள் தான். அப்பாவி இந்தியர்களை கொல்லும் முஸ்லீம் பயங்கரவாதிகளை ஆதரிக்கும் பாகிஸ்தானுக்கு இதுவும் வேண்டும் .இன்னமும் வேண்டும்


Thravisham
நவ 07, 2025 07:46

திருட்டு த்ரவிஷ முதல் குடும்பத்துக்கு எதிராக பொங்க மாட்டார்களா? இருக்கவே இருக்குது ஊழல் காசுக்கு அடிமையாகிவிட்ட ஊடகங்களை வைத்து அடக்க. அல்லது ஊரெங்கும் சாராயத்தை வெள்ளமென பாய்ச்சி மூளையை மழுங்கடிக்க


Ravi R
நவ 07, 2025 08:43

வெயிட் அண்ட் சி


ஜெய்ஹிந்த்புரம்
நவ 07, 2025 06:49

இவ்வளவு பெரிய கூட்டம் கூட அங்கே சுதந்திரம் இருக்கிறது போலுள்ளதே. இந்த சைடு என்றால் சுட்டு பொசுக்கியிருப்பாங்க. சும்மாவா.


Ganesun Iyer
நவ 07, 2025 07:44

அப்ப போயிடு..


duruvasar
நவ 07, 2025 08:04

இரண்டாவது முறை குண்டு போட்டு தன மக்களையே கொன்ற சுதந்திரமும் அங்கு இருக்கிறது. அங்கே இன்னும் திராவிட மாடல் போகவில்லை என்பதும் தெரிகிறது. இல்லையென்றால் எதிர்ப்பு குரல்களை நடு நிசியில் சென்று கைது சென்று உள்ளே தூக்கி வைத்திருப்பார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை