உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி; ஜேக்பால் வெற்றி

குத்துச்சண்டையில் மைக் டைசன் தோல்வி; ஜேக்பால் வெற்றி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், நடைபெற்ற போட்டியில் பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசனை,58, ஜேக் பால்,27, வீழ்த்தினார். முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் 58, இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். சுமார் 20 ஆண்டுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார். முன்னதாக எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கி தன் புகழை இழந்துவிட்டார். இதனால் அவர் போட்டியில் பங்கேற்கவில்லை.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r0rdteqb&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜேக்பால் ,31 என்ற பிரபல யூடியூபர் கடந்த 2013ம் ஆண்டு முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். இந்நிலையில் இன்று (நவ.,16) டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், குத்துச்சண்டை போட்டி நடந்தது.இதில், 58 வயதான மைக் டைசன், 31 வயதான யூடியூபர் ஜேக்பால் மோதினர். 8 சுற்றுகளாக நடந்த போட்டியில் மைக் டைசனை ஜேக் பால் வீழ்த்தினார். போட்டியின் அறிமுக விழாவில், ஜேக் பாலின் கன்னத்தில் மைக் டைசன் அறைந்த காட்சிகள் வைரலாகி, உலக அளவில் போட்டிக்கு எதிர்பார்ப்பு கிளம்பியது. 20 ஆண்டுகளுக்கு பின் மைக் டைசனின் திறமையை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற ஜேக்பாலுக்கு இந்திய மதிப்பில் 338 கோடி ரூபாய் பரிசுப்பணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

N.Purushothaman
நவ 16, 2024 16:48

மொக்க டைசன் ஒழுங்கீனத்திற்கு பெயர் போனவர் .....காசுக்காக இந்த வயசுல கௌரவத்தை இழக்கலாமா ?


Ramesh
நவ 16, 2024 15:29

தோத்தாலும் 160 கோடி பரிசு வென்று உலக சாதனை படைத்திருக்கிறார். இந்த வயதில் இவ்வளவு பணம் அள்ளினவர் இதுவரை எவரும் இல்லை.


SUBRAMANIAN P
நவ 16, 2024 14:25

வயசான காலத்துல உனக்கு எதுக்கய்யா இதெல்லாம். சிங்கத்துக்கு ரொம்ப வயசான பிறகும் இளஞ்சிறுத்தைகிட்ட போயி மோதினா இதுதான் கதி


RAMAKRISHNAN NATESAN
நவ 16, 2024 13:06

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் இதை தமிழகத்தில் நடத்தினால் மைக் டைசன் ஐ வைத்து நிறைய பிரச்னைகளைத் திசை திருப்பலாம் .....


R Ravikumar
நவ 16, 2024 12:03

மரியாதையை கெடுத்து கொண்டார் .. மைக் டைசன் . இல்லை என்றால் இது ஸ்கிரிப்ட் பண்ணப்பட்ட நாடகமாக இருக்கலாம் .


சமீபத்திய செய்தி