உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திருப்பம்! வங்கதேச தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு : அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

திருப்பம்! வங்கதேச தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு : அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

டாக்கா: வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என அமைச்சரவையில் உள்ள ஆலோசகர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் - உஸ் - ஜமான் முழு ஆதரவு அளித்தார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முஹமது யூனுஸ் எடுத்த நிலையில், அவருக்கும், தளபதி வாக்கருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது. இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விஷயத்தில் மோதல் அதிகரித்தது. வங்கதேச தேசியவாத கட்சியும், யூனுசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது.

பிரமாண்ட பேரணி

இந்த சூழலில், தலைமை ஆலோசகர் பதவியை முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அரசியல் கட்சிகள் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதால், ராஜினாமா செய்ய உள்ளதாக யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் யூனுஸ் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை. அவர்கள் டாக்காவின் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரே தலைமை ஆலோசகராக நீடிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பான சுவரொட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சூழலில், வங்கதேச அரசியல் ஆலோசகர்கள் அடங்கிய அமைச்சரவை கூட்டம் முஹமது யூனுஸ் தலைமையில், டாக்காவில் நேற்று நடந்தது. அப்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்தும், தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் அமைப்பின் வங்கதேச கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. கூட்டத்துக்குப் பின், திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத் கூறுகையில், “நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு நடுவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து வருகிறோம். ''தலைமை ஆலோசகர் யூனுஸ் எங்கள் வழிகாட்டியாக இருந்து வழி நடத்தி வருகிறார். ''பல சவால்களையும் கடந்து தான் நாங்கள் பணி செய்து வருகிறோம். கூட்டத்தின்போது, தலைமை ஆலோசகரின் ராஜினாமா குறித்த பேச்சு எழுந்தது. அந்த பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். அவர் அதை ஏற்றுக் கொண்டார். இடைக்கால அரசின் தலைவராக அவர் நீடிப்பார்,” என்றார்.

விவாதிப்பு

ஆலோசகர்களுடனான கூட்டத்துக்குப் பின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பின் தலைவர்களை முஹமது யூனுஸ் சந்தித்துப் பேசினார். அவர்களுடன் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அவர் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ராணுவ தளபதியுடன் மோதல் ஏன்?

- நமது சிறப்பு நிருபர் - புதிய ஆட்சி அமைந்தது முதல், வங்கதேச அரசுக்கு முழு ஆதரவு அளித்து வந்த ராணுவ தளபதி வாக்கர் - உஸ் - ஜமானிடம் ஆலோசிக்காமல் தேசிய பாதுகாப்பு செயலரை முஹமது யூனுஸ் சமீபத்தில் நியமித்தார். இது இருதரப்பினருக்கும் இடையிலான மோதலை அதிகரித்தது. இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பது விஷயத்திலும் யூனுஸ் மற்றும் வாக்கர் இடையே மாறுபட்ட கருத்து நிலவியது. சில மாதங்களுக்கு முன் சீனாவுக்கு சென்ற யூனுஸ், நம் நாட்டிற்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வைத்தார். அதேசமயம், ரஷ்யாவுக்கு சென்ற ராணுவ தளபதி வாக்கர், இந்தியாவுக்கு ஆதரவாகவே பேசியதாகக் கூறப்படுகிறது. யூனுசுடனான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து, பொதுத் தேர்தலை உடனடியாக நடத்தும் முடிவுக்கு வாக்கர் தள்ளப்பட்டார். வாக்கரின் முடிவுக்கு பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு யூனுஸ் தடை விதித்த நிலையில், அடுத்த பெரிய கட்சியான வங்கதேச தேசியவாத கட்சியும் தேர்தலை உடனடியாக நடத்தும் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தது.வாக்கரின் இந்த நடவடிக்கை, முஹமது யூனுசுக்கு கடும் நெருக்கடியை கொடுத்தது. அதேநேரம், வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் பல்வேறு மாணவர் அமைப்பினரும் இடைக்கால அரசுக்கு எதிராக போராட்டத்தை துவக்கியது, நெருக்கடியை மேலும் அதிகரித்தது. அண்டை நாடான மியான்மரில் உள்ள ரோஹிங்யா அகதிகள், வங்கதேசத்துக்கு வரும் வகையில் வழித்தடம் அமைக்கும் முயற்சியில் முஹமது யூனுஸ் ஈடுபட்டுள்ளார். இதற்கு வங்கதேசத்தில் உள்ள மாணவர் அமைப்பினர் உட்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவும், இடைக்கால அரசின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை முஹமது யூனுஸ் எடுத்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்தன. ஆட்சி அதிகாரத்தின் மீதான ஆசை அதிகரித்ததை அடுத்து, தேர்தல் நடத்தும் முடிவை ஏதாவது காரணங்களை கூறி தள்ளிப்போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள யூனுசின் இந்த முடிவு, அரசியல் நாடகத்தின் ஒரு பகுதி என்ற கருத்தும் வங்கதேசத்தில் நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
மே 25, 2025 07:21

பைடனின் கடும் உழைப்பில் உருவான ஆட்சிதான் இது. இந்தியா எளிதாக ஹசீனாவை விட்டுவிடும் என்று நினைத்தார்கள். அமெரிக்காவுக்கு இந்தியா பல விதங்களில் செக் வைத்தவுடன் டிரம்ப் கூட கட்சிமாறிவிட்டார். 450 மில்லியன் டாலர் கூட அள்ளிக் கொடுக்கிறார்.


Mecca Shivan
மே 25, 2025 07:05

யார் ஆட்சியில் இருந்தாலும் CIA பாகிஸ்தானின் ISI போல தனியாக செயல்படும் தீவிரவாத ஆதரவு இயக்கம் என்பதை நாம் அறியவேண்டும். பாகிஸ்தானின் இன்றைய நிலைமைக்கு காரணம் CIA ..ஆப்கானிஸ்தானை அழித்தது CIA இன்று பங்களாதேஷை அழித்துக்கொண்டிருப்பது CIA ..இலங்கையில் மக்கள் போராட்டத்தை தூண்டியது CIA ..இவ்வளவும் எதற்காக என்றால் இந்திய ஆதரவு அரசுகளை கவிழ்த்து இந்தியாவை தங்களின் வாசலில் நிற்கவைக்க ..டொனால்ட் டக்காக இருந்தாலும் சரி .. இல்லை அந்த கழுதை கட்சியாக இருந்தாலும் சரி. அமெரிக்காவை உண்மையாக ஆள்வது CIA மற்றும் அமெரிக்க வார்த்தை நிறுவங்கள்தான் ..ஒரு காலத்தில் GM போர்ட் சிட்டி பேங்க் போன்ற நிறுவங்கள் ஆண்ட அமெரிக்காவை இன்று ஒற்றை மனிதனாக ஆள்வது ஏலியன் மாஸ்க் மற்றும் அவரின் வியாபார கூட்டாளி டிரம்ப் & கோ தான் ..


Indhuindian
மே 25, 2025 06:42

எதுக்கும் டாக்காவுலே ஒரு பிளானை ரெடியா வையுங்க ஓடிப்போக கொஞ்ச டயம்தான் குடுப்பாங்க அந்த விமானதுலே ஒன்னு பாகிஸ்தானுக்கோ இல்லே துறுக்கிக்கோ ஓடி போயிடுங்க அங்கே ஜாலியா இருக்கலாம்


மீனவ நண்பன்
மே 25, 2025 03:33

ஜனநாயகமும் மார்க்கமும் ஒரே பாதையில் பயணிக்காது


சமீபத்திய செய்தி