உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

பதவியை விட்டுக் கொடுக்கவும் தயார்; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கீவ்: 'உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்' என அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.கடந்த, 2022 பிப்.,ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று ஆண்டுகளை எட்டியுள்ள நிலையில், போர் நீடித்து வருகிறது. இந்தப் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. தற்போது போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சு நடத்தி வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lyqeeg0e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதற்கிடையே, 'உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதிகாரி. இவர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக விட மாட்டார்', என அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி இருந்தார். இந்நிலையில் நிருபர்கள் சந்திப்பில் ஜெலன்ஸ்கி கூறியதாவது: உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்றால் பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன். ரஷ்யாவின் முழுமையான படையெடுப்பிற்கு எதிராக உக்ரைனுக்கு அதிபர் டிரம்ப் பாதுகாப்பு வழங்க வேண்டும். அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மிகவும் தேவை. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே டிரம்ப் மத்தியஸ்தராக இருக்க வேண்டும். இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Vijay D Ratnam
பிப் 24, 2025 16:48

இந்த கோமாளி விளாடிமிர் ஜெலன்ஸ்கியை பெரிய ஹீரோ போல காட்டியது ஐரோப்பிய அமெரிக்க ஊடகங்கள். குறிப்பாக சீன கைக்கூலி என்று அன்போடு அழைக்கப்படும் பிபிசி. அந்த செய்தியை சில தமிழ்நாட்டு ஊடகங்களும் அப்படியே வெளியிட்டது. உக்ரேனை நேட்டோவில் சேர்க்க போகிறேன் என்று கிளம்பி நாட்டை சுடுகாடு ஆகிவிட்டார் இந்த மனிதன். இப்போ பதவி விலக தயாராம். இதுக்கு மேல அவரை பதவியில் அமர்த்த மக்கள் என்ன முட்டாள்களா. இந்த ஆஅமேரிக்கா ஜெர்மனி பிரான்ஸ் அதிபர் சொறிந்துவிட ரணகளமானது உக்ரேன்தான். இப்போ என்னாச்சி அமெரிக்க அதிபராக இருந்த ஜோ பைடன் பதவி காலி, ஜெர்மன் அதிபராக இருந்த ஓலாஃப் ஷோல்ஸ் பதவி காலி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் பதவியும் காலியாக போகிறது.


பிலிப்ஸ்
பிப் 24, 2025 16:01

அமெரிக்காவின் ட்ரம்ப் உக்ரைனை கைகழுவி பெரிய தவறு செய்கிறார்.


ஜெகதீஸ்வரன் தண்டபானி
பிப் 24, 2025 14:27

தம்பி நீ ஏற்கனவே அமெரிக்காவின் பார்வையில் சதாம் ஹுசைன் ஆகி வீட்டாய்? ரஷ்யா ஆதரவு அரசிடம் ஒப்படைத்து விட்டு ஓரமாக உட்காரவும்.


NAGARAJAN
பிப் 24, 2025 13:30

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் சதி வலையில் சிக்கிய ஜெலன்ஸ்கி. . உருப்பட விட மாட்டார்கள்


Karthik
பிப் 24, 2025 10:06

இந்த கூத்தாடி ஜெலன்ஸ்கி தன் பதவி மற்றும் உக்ரைனை விட்டு வேளியேறினாலே போர் முடிவுக்கு வந்துவிடும். மீதமிருக்கும் மக்களாவது உயிர் பிழைத்து நிம்மதியாக வாழலாம். தகுதியில்லாத திரைக்கூத்தாடியை தேர்ந்தெடுத்த பாவத்துக்கு மக்கள் கொடுக்கும் விலை உயிர்பலி. உலக நாட்டு மக்களுக்கே இது ஒரு பாடம்.


Indhuindian
பிப் 24, 2025 09:45

How can any country allow its forces of countries enimical to that country allow these countries forces menacingly stationed at its borders under the alibi of protecting the member country. War was immediately cease once Ukraine s that it will not join NATO. But the ego of Zelensky is far weightier than the sufferings of its citizens. Unless this is done, there is no chance of cease fire and there will no Ukrine for NATO to defend.


vbs manian
பிப் 24, 2025 09:08

உக்கிரைன் இல்லாமல் பேச்சு வார்த்தை எந்த லாபமும் இல்லை. அமெரிக்கா தான்தோன்றித்தனமாக போல் செயல்படுகிறது. உக்கிரேன் நாட்டின் கனிம வளங்கள் மீது அமெரிக்காவுக்கு ஒரு கண்.


Srinivasan Krishnamoorthy
பிப் 24, 2025 09:34

what is your problem. world is behind who are powerful. Now every european country will ditch ukraine and zelensky. Ukraine will new leader after election, every one will align with Putin. Yes long term deals will be worked out between US, russia and some Indian companies to participate for rehabilitation


பேசும் தமிழன்
பிப் 24, 2025 08:49

அட .... உனக்கு இந்த புத்தி இவ்வளவு நாளாக எங்கே போச்சு.... அடுத்த நாட்டுக்காரன் பேச்சை கேட்டு சொந்த நாட்டு மக்களையே அழித்து விட துணிந்த பாவி நீ..... உனக்கு இன்னும் இருக்கு.... உன் பதவி போவது மட்டுமல்லாமல் உயிரே கூட போகலாம்.... அந்தளவுக்கு உக்ரைன் நாட்டு மக்களை படுத்தி இருக்கிறாய் !!!


Srinivasan Krishnamoorthy
பிப் 24, 2025 09:35

this guy is corrupt , looted money , share between him and biden obama group. people are impacted


Barakat Ali
பிப் 24, 2025 08:48

இத்த கேக்க சொல்லோ கலீஞர் டயலாக் மாதிரி கீதுபா ....


RAJ
பிப் 24, 2025 08:29

டிரம்ப் கால்ல விழுறதைவிட புடின் கைய குலுக்கு .. எல்லாம் ஓவர்.. யோசிட மட சாம்பிராணி ...


Ganesh
பிப் 24, 2025 09:32

கண்டிப்பாக.... புடின் கூட சேர்ந்தால் நாடும் பலப்படும்... பல நன்மைகள் உண்டு


Srinivasan Krishnamoorthy
பிப் 24, 2025 09:36

people know where is the power ?


புதிய வீடியோ