உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் வெற்றி பெற்றார் வம்சாவளி இந்தியர் ஜோஹ்ரான் மம்தானி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில், ஜனநாயக கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றார். அமெரிக்காவில் மிக முக்கியமான பிரபலமான நகரம் தான் நியூயார்க். இந்த நகரத்தின் மேயராக இருந்த ஜனநாயக கட்சியைச் சேர்ந்த எரிக் ஆடம்ஸ் ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் இந்த நகரத்திற்கு மேயர் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் மும்முனைப் போட்டி நிலவியது. ஜனநாயகக் கட்சி சார்பில் உகாண்டாவில் பிறந்து நியூயார்க் நகரில் வளர்ந்த 34 வயதான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜோஹ்ரான் மம்தானி போட்டியிட்டார். அவரை எதிர்த்து டிரம்ப்பின் குடியரசுக் கட்சி சார்பில் கர்டிஸ் ஸ்லிவா போட்டியிட்டார். அதேபோல நியூயார்க்கின் முன்னாள் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோ சுயேச்சையாக களம் இறங்கினார்.அக்., 25ம் தேதி ஓட்டுப்பதிவு தொடங்கி, நவ.,4ம் தேதி வரை நடந்தது. அனைத்து வேட்பாளர்களும் பொதுமக்கள் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என அழைப்பு விடுத்தனர். தற்போது தேர்தல் முடிவுகள் வெளியானது. நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து, நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.இந்த வெற்றியின் மூலம், நியூயார்க் நகரத்தின் அரசியல் வரலாற்றிலேயே முதல் இந்திய-அமெரிக்க முஸ்லிம் மேயர் என்ற வரலாற்றுச் சாதனையை ஜோஹ்ரான் மம்தானி மாம்டானி படைத்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய அரசியல் பதவிகளில் இளம் வயதிலேயே (34) இவர் பொறுப்பேற்றுள்ளது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. இவர் நடத்திய தீவிர தேர்தல் பிரச்சாரம் இவருக்கு இந்த மாபெரும் வெற்றிக்கு வழி வகுத்து இருக்கிறது. ஜோஹ்ரான் மம்தானி அதிபர் டிரம்பின் கொள்கைகளையும், டிரம்பையும் கடுமையாக விமர்சித்து இருந்தார். ஏனெனில் நியூயார்க் நகரம் அமெரிக்காவின் மிக முக்கியமான நகரமாகும். இந்த நகரில் நடக்கும் அரசியல் மாற்றம், நாடு முழுவதும் எதிரொலிக்கும். இந்த தேர்தல் சர்வதேச கவனத்தை பெற்றது. வெற்றி வாகை சூடிய, ஜோஹ்ரான் மம்தானிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

நிதி தரமாட்டேன்!

மேயர் தேர்தலில் ஜோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றால் நியூயார்க் நகரத்திற்கான நிதியை நிறுத்துவேன் என அதிபர் டிரம்ப் அச்சுறுத்தி இருந்தார். ஒரு கம்யூனிஸ்ட் தலைமையில் இருந்தால் அது மோசமாகிவிடும். அவர் திறமையானவர் இல்லை. உலகின் மிகப்பெரிய நகரத்தின் மேயராக, மம்தானியை கொண்டுவர முடியாது என அதிபர் டிரம்ப் கூறியிருந்தார். தற்போது மம்தானியின் வரலாற்று வெற்றி, அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் புஸ்வாணம் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

பா மாதவன்
நவ 05, 2025 17:04

இந்த வெற்றி ஜோஹ்ரான் மம்தானி பெற்ற உண்மையான வெற்றி அல்ல. கோமாளி டிரம்ப் எதிர்ப்பு அலை கொடுத்த பரிசு. ஒழுங்காக பயன்படுத்த வேண்டும்.


V Gopalan
நவ 05, 2025 16:13

But after victory, he has dragged Prime Minister Modi as a war criminal along with Israel PM Nethanyahu but praised the then PM of India Jawaharlal Nehru. Now, a trump card for the anti India followers.


Thravisham
நவ 05, 2025 16:10

அமெரிக்க பப்பு


venkatan
நவ 05, 2025 14:13

உச்ச ஆணவத்திற்கு ஓர் ஆப்பு .


D Natarajan
நவ 05, 2025 13:37

லண்டனுக்கு நேர்ந்த கதி தான் இனி நியூ யார்க்கும்


Svs Yaadum oore
நவ 05, 2025 12:30

நியூயார்க் மேயர் தேர்தலில் இந்த பயங்கரவாத ஆதரவு ஆசாமி வெற்றி பெற்றது இந்தியாவிற்கு அச்சுறுத்தல்... சில நாட்கள் முன்பு அமெரிக்க துணை அதிபர் அவர் மனைவி ஹிந்து மதம் குறித்து கூறிய சர்ச்சை கருத்து.... ஹிந்து மத மற்றும் இந்தியஎதிர்ப்பு அமெரிக்காவில் இனி மேலும் மேலும் தீவிரமாகும் ..எந்த அச்சுறுத்தலும் மோடி அரசாங்கத்தை அசைக்க முடியாது ...


Dv Nanru
நவ 05, 2025 11:53

நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான ஜோஹ்ரான் மம்தானி மாபெரும் வெற்றியை பதிவு செய்து நகரத்தின் புதிய மேயராகத் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்அவருக்கு வாழ்த்துக்கள் இதன் மூலம் கம்யூனிசத்திற்கு உயிர் இருக்கு என்பது தெளிவாகி உள்ளது ..Jaihind


ديفيد رافائيل
நவ 05, 2025 11:41

இவன் உண்மையான இந்தியனா இருந்தா இந்தியாவில் இந்திய மக்களுக்காக தேர்தலில் ஜெயித்து சேவை பண்ணட்டுமே


K V Ramadoss
நவ 05, 2025 16:32

தேவையற்ற விமர்சனம்


vbs manian
நவ 05, 2025 11:37

த்ரும்பின் சமீபத்திய அதிரடி நடவடிக்கைகளுக்கு அமெரிக்கர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வரி விதிப்பு சாதாரண அமெரிக்கனை மிகவும் பாதித்துள்ளது.


Ramesh Sundram
நவ 05, 2025 11:24

முற்றிலும் சரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை