துவாரகா ஸ்ரீராம் மந்திரில், 23வது விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண விழா
புதுடில்லி : துவாரகா ஸ்ரீராம் மந்திரில், 23வது விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண விழா செப்-7 மிகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை ஸ்ரீ ரங்கநாதருக்கு அபிஷேகத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், ஸ்ரீ ராம்குமார் தலைமையில் நடைபெற்றது. ஹஸ்தல் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம குழு அன்பர்களும் இதில் பங்கேற்று பாராயணம் செய்தனர். கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமம் தொடர்ந்து நடைபெற்றன. ஸ்ரீ சரவண சாஸ்திரிகள் இதனை நடத்தி வைத்தார். பிறகு மகா தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம் ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு விநியோகம் செய்தனர்.- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன், புதுடில்லி