உள்ளூர் செய்திகள்

நொய்டாவில் ஆஷாட ஏகாதசி

ஆஷாட ஏகாதசி முன்னிட்டு, வேதிக் பிரசார் சன்ஸ்தான் நிர்வாகம் சார்பில், வி.எஸ்.எஸ்., நொய்டா அமைப்பின் உறுப்பினர்கள் இணைந்து ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் குழு பாராயணத்தை நடத்தினர். இதனைத் தொடர்ந்து, வி.எஸ்.எஸ். பஜன் மண்டலி, நொய்டா வழங்கிய பக்தி பஜனைகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நொய்டா செக்டர்-62-ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர் மற்றும் ஸ்ரீ கார்த்திகேயர் திருக்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது.மேலும், இந்நன்னாளில் ஆஷாட உஞ்சவிருத்தி என்ற தொன்மையான சனாதன தர்ம பாரம்பரிய நிகழ்வும் நடைபெற்றது. இதில், ஒரு பாகவதர் பக்தி பஜனைகள் பாடிக்கொண்டு, பக்தர்களிடம் இருந்து பிக்ஷை அரிசி, வெல்லம் மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றை ஏற்றுக்கொள்வார். (ஒரு கைப்பிடி அளவு வழங்கினாலும் அது மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளப்படும்.)26 ஜூலை காலை, ராமபத்ரன் பாகவதர் நொய்டா செக்டர்-62 கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது ஏராளமான பக்தர்கள் அரிசி, வெல்லம் மற்றும் துவரம் பருப்பை பக்தியுடன் காணிக்கையாக வழங்கினார். அவற்றை அனைத்தையும் அவர் சேகரித்து, தர்மம் சேவைக்காக பயன்படுத்துவதற்காக ஆசிரமத்தில் ஒப்படைத்தார். - - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !