உள்ளூர் செய்திகள்

நொய்டா முருகன் கோவிலில் மஹா ஸ்கந்த சஷ்டி விழா நிறைவு

வேத மந்திரம் முழங்க, நொய்டா முருகன் கோவிலில் ஸ்கந்த சஷ்டி விழா, 22ல் கணபதி ஹோமத்துடன் துவங்கி, ஸ்ரீ மஹா ருத்ரம் முழக்கத்துடன் துவங்கியது. மாலையில் தினமும் ஸ்ரீ சுப்ரமண்ய சஹஸ்ரநாம அர்ச்சனைநடைபெற்றது . இரண்டாம் நாளிலும் தொடர்ந்து ஸ்ரீ ருத்ரம் கோஷமிடுதல், மாலையில் வித்வான் வெங்கடேஸ்வரனின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. மற்றும் மாலையில் திருப்புகழ் அன்பர்கள் 'திருப்புகழ் இசை வழிபாடு' வழங்கினார். 26 ஆம் தேதி கோயில் நிர்வாகத்தினர் காலையில் 'சத்ரு சம்ஹார ஹோமம்', ஸ்ரீ மஹா ருத்ர ஹோமம், தொடர்ந்து ஸ்ரீ கார்த்திகேய சுவாமி லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மஹா தீபாராதனையுடன் அன்றைய நிகழ்ச்சி நிறைவடைந்து, பிரசாதம் விநியோகிகப்பட்டது. முதல் முறையாக கோவில் நிர்வாகம், இந்த வருட மஹா ஸ்கந்த சஷ்டி உத்சவத்தில் ஸ்ரீ மஹா ருத்ரம் ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திங்கட்கிழமை, ஸ்கந்த சஷ்டி தினத்தில், கோவில் வளாகத்திற்குள் பால் குடம், காவடி ஊர்வலமும் நடைபெற்றன. மேலும் காலையில் ஸ்ரீ கார்த்திகேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் ஊர்வலம், சூர சம்ஹாரம், தொடர்ந்து மஹா பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த மஹா ஸ்கந்த சஷ்டியை முன்னிட்டு ஏழு நாட்களும் இலைகள், சிவன், பார்வதி, விபூதி, பழநி முருகன், ராஜ அலங்காரம், சந்தனம் அலங்காரத்தில் முருகன் அருள் பாலித்தார். ஸ்ரீ கார்த்திகேயா திருக்கல்யாணத்துடன் ஸ்கந்த சஷ்டி விழா நிறைவு பெற்றது . அனைத்து பூஜைகளும் ஹோமங்களும் சங்கர் மற்றும் ஸ்ரீராம் மேற்பார்வை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் கோவில் வாத்தியார்கள் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா, கணபதி, மற்றும் விக்னேஷ், ஆகியோரின் உதவியுடன் நடைபெற்றன. க்ஷத்ரு சம்ஹார ஹோமத்தின் சிறப்புகளை கணபதி பக்தர்களுக்கு விளக்கமளித்தார். ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம மண்டலி, நன்கொடையாளர்கள், ஸ்பான்சர்கள், தன்னார்வலர்கள், பெண்கள் பிரிவு மற்றும் மூத்த கமிட்டி உறுப்பினர்களான ரவி சர்மா, பாலாஜி, ராஜு ஐயர், ராஜேந்திரன், வெங்கடராமன் மற்றும் பராமரிப்பு பணியாளர் பிரசாந்த், ஆகியோர்களுக்கு மட்டுமல்லாமல் தொண்டர்கள் அர்ஜுன், பழனிவேல் ஆகியோர்களுக்கும் சிறப்பாக பணி செய்ததற்கு கோவில் நிர்வாகம் நன்றி தெரிவித்தனர். பக்தர்கள் ஸ்கந்த சஷ்டி கவசம், முருகனை போற்றிய பாடல்கள், முருக கோஷம், மற்றும் 'வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹாரா' கோஷமிடுவதையும் காண முடிந்தது. அனைத்து பூஜைகளும் ஆறு படை முருகன் கோவில்களில் நடப்பது போலவே நடை பெற்றது என்று பக்தர்கள் தெரிவித்தனர். சூர சம்ஹாரமும் திருச்செந்தூரில் நடப்பது போலவே கோவில் நிர்வாகத்தினர் இந்த வருடம் ஏற்பாடு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது . வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், ஒத்த எண்ணம் கொண்ட பக்தர்களால் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த நாற்பது வருடங்களாக சேவை செய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சன்ஸ்தான் நொய்டாவில் இருக்கும் ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோவில், செக்டர் 22, மற்றும் ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டர் 62, இரண்டு கோவில்ககளையும் நிர்வகித்து வருகிறது. - புதுடில்லியிலிருந்து நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்