கல்பாதி ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் நவராத்திரி சிறப்பு நிகழ்ச்சி
புதுடில்லி : நவராத்திரி மூன்றாம் நாளை முன்னிட்டு, கல்பாதி, சாத்தாபுரம் ஸ்ரீ பிரசன்ன மகாகணபதி கோயிலில் காலை கணபதி ஹோமத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து, மிருத்யுஞ்சய ஹோமம், நித்ய பூஜை, பூர்ணாஹுதி, கணபதி பிரார்த்தனை, சங்கல்பம், கலச பூஜை, ஸ்ரீ ருத்ராபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. மூலவர் ஸ்ரீ பிரசன்ன கணபதிக்கு மலர்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ பிரசன்ன கணபதி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.நவராத்திரியின் மூன்றாம் நாள் வழிபாடு என்பது வாழ்வில் இருக்கும் நெருக்கடியான நிலைகளை சரி செய்யும் வழிபாடாகும்.- புதுடில்லியில் இருந்து நமது தினமலர் செய்தியாளர் எம்.வி. தியாகராஜன்.