ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம்
புது தில்லி விஸ்வாஸ் குழு அன்பர்கள் செப்டம்பர் 21 மற்றும் 22-ம் தேதிகளில் அகண்ட ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தை புதுதில்லி உத்யன் சாலையில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிலில் ஏற்பாடு செய்திருந்தனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உலக அமைதிக்காக ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தனர். தில்லி மற்றும் என்.சி.ஆர் பிராந்தியத்தில் உள்ள ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் அனைத்து பெரிய மற்றும் சிறிய குழுக்களும் இந்த மாபெரும் சத்சங்கத்தில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அகண்ட ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணத்தை ஏற்பாடு செய்த விஸ்வாஸ் குழுவினருக்கு சஹ சரணாகதி ஆன்மிக யூடியூப் சேனல் தனது நன்றியை தெரிவித்தது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்