நொய்டா கோவிலில் வைகுண்ட ஏகாதசி
நொய்டா, செக்டர் 62 ல் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா ஸ்ரீ கார்த்திகேயா கோவிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 'சொர்க்க வாசல்' திறப்பு, மற்றும் ஸ்ரீ ராமர் பரிவாரத்திற்கு மஹா அபிஷேகம், பிறகு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்கள் தரிசித்தனர். பக்தர்களால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் மற்றும் பிற ஸ்லோகங்களும் வாசிக்கப்பட்டது. மகா தீபாராதனையுடன், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அணைத்து பூஜைகளையும் மணிகண்டன் சர்மா, மோஹித் மிஸ்ரா ஏற்பாடு செய்தனர். கடும் குளிரையோ, மூடுபனியையோ பொருட்படுத்தாமல், காலையில் அதிக அளவில் கோயிலுக்கு வந்த பக்தர்களை கோயில் நிர்வாகம் பாராட்டியது - நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்