இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில், பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதம் வாங்குவதற்காக தயாராகும் மண்பாண்டங்கள்..
28-08-2026 | 15:51
திருநெல்வேலி ஜங்ஷன் சிந்து பூந்துறை தாமிரபரணி ஆற்றில் விடப்படும் சாக்கடை நீரை தனியார் நிறுவனம் சுத்திகரிப்பு கருவிகள் மூலம் அங்கேயே சுத்திகரித்து நல்ல தண்ணீராக மாற்றும் முயற்சி நடந்தது...
28-08-2026 | 15:50
சகோதரத்துவத்தை உணர்த்தும் வகையில் கோவை ப்ரூக் பீல்ட்ஸ் ரோட்டில் வட மாநிலத்தோர் இனிப்பு வழங்கி, கைகளில் ராக்கி கட்டி ரக்சாபந்தனை கொண்டாடினர்.
28-08-2026 | 15:50
திருப்பூர் மங்கலம் ஊராட்சி புக்குளிபாளையம் பகுதியில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டி உடைத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது.
28-08-2026 | 15:50
தமிழகம், கேரளம் எல்லையில் காரமடை அருகே உள்ள முள்ளி சோதனை சாவடியில் உர கடத்தலை தடுப்பதற்கு வேளாண்மை துறை சார்பில் கள ஆய்வில் வேளாண்மை உதவி இயக்குனர் மேகலா தேவி ஆய்வில் ஈடுபட்டார்.
28-08-2026 | 15:48
கோவை பாலக்காடு மெயின் ரோட்டில் மைய தடுப்புகள் இடையே உள்ள சந்து வழியாக பாதசாரிகள் ரோட்டை கடக்க முயன்று வருவதால் வாகன ஓட்டிகள் தடுமாறுவதோடு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இடம்: குனியமுத்தூர்.
28-08-2026 | 15:48
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த விவசாயிகளுக்கு குறைக்கேட்புக்கூட்டம் கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் நடந்தது
28-08-2026 | 15:47