உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடவள் அரங்கம் /  தேர்வு பயம், மன அழுத்தத்தை போக்கும் 10ம் வகுப்பு மாணவி

 தேர்வு பயம், மன அழுத்தத்தை போக்கும் 10ம் வகுப்பு மாணவி

- நமது நிருபர் -: பொதுவாக, 10ம் வகுப்பு மாணவ - மாணவியருக்கு தேர்வு பயம் இருக்கும். ஆனால், 10ம் வகுப்பு மாணவி ஒருவர், தன் சக மாணவர்களுக்கு மன அமைதியை வழங்கும் வகையில், ஊக்கம் அளித்து வருகிறார். தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் மூடபித்ரியை சேர்ந்தவர் விஷ்ணுபிரியா பை, 15. இங்குள்ள, ஆல்வாஸ் சென்ட்ரல் பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். இது குறித்து, மாணவி விஷ்ணுபிரியா பை கூறியதாவது: ஒரு மணி நேரம் மாணவர்களுக்கு மன அழுத்தம் மேலாண்மை, உணர்ச்சியை சமநிலைப்படுத்துதல், ஜப்பானிய நுட்பங்கள், 'பொமோடோரோ' நுட்பம் ஆகியவற்றை செயல்முறையாக கற்பிக்கிறேன். பெரியவர்கள் அறிவுரை கூறுவதை விட, நம் வயதினர் வந்து பேசும்போது, குழந்தைகள் மிகவும் இயல்பாக பழகி, நட்புடன் பதிலளிக்கின்றனர். ஏற்கனவே, இந்தியன் கவுன்சிலிங் சர்வீஸ் மூலம் ஆலோசனை மற்றும் உளவியல் படிப்பை முடித்து உள்ளேன். என் பணி அனுபவத்துக்காக சிறிய அளவில் துவங்கிய இந்த யோசனை, இப்போது உலக சாதனை படைக்கும் அளவுக்கு வளர்ந்து உள்ளது. இதற்கு நான் படிக்கும் பள்ளியும், பெற்றோரும் முழு ஆதரவு அளித்துள்ளனர். இதற்கு மாணவர்களிடம் இருந்து வரவேற்பு கிடைத்த உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை