உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் /  கர்நாடக பிக்கிள்பால் போட்டி 7 அணிக்கு 56 வீரர்கள் தேர்வு

 கர்நாடக பிக்கிள்பால் போட்டி 7 அணிக்கு 56 வீரர்கள் தேர்வு

- நமது நிருபர் -: கர்நாடகாவில் முதன் முறையாக, பிக்கிள்பால் போட்டிக்கு, ஏழு அணிகளுக்கு, 56 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். கர்நாடகாவில் முதன் முறையாக கர்நாடக பிக்கிள்பால் சங்கம் மற்றும் என்ட்ரோபி ஸ்போர்ட்ஸ் இணைந்து, அக்., 9 முதல் 11ம் தேதி வரை, பெங்களூரு ஜி.கே.வி.கே., மைதானத்தில் பிக்கிள்பால் போட்டி நடத்துகிறது. இப்போட்டியில், பெங்களூரு சார்ஜர்ஸ், மங்களூரு ரோர்ஸ், மைசூரு ராயல்ஸ், துமகூரு டைடன்ஸ், கூர்க் ஒரிஜினல், பல்லாரி டஸ்கர்ஸ், பெலகாவி ஸ்குவாட் ஆகிய ஏழு அணிகள் மோதுகின்றன. இந்த ஏழு அணிகளுக்கான மொத்தம் 89 வீரர்களில், 56 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஒவ்வொரு அணியிக்கும் ஒரு கேப்டன் உட்பட எட்டு பேர் இடம் பெறுவர். இப்போட்டியில் கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த அனுபவம் வாய்ந்த, வளர்ந்து வரும் வீரர்கள் பங்கேற்கின்றனர். பெங்களூரு அணிக்கு அனுஜா பிரவீன் மகேஸ்வரி; துமகூர் - மயூர் நாராயண் பாட்டீல். மற்றும் கூர்க் - குல்திப் ரவீந்திர மஹாஜன்; மங்களூர் - சோனுகுமார் விஸ்வகர்மா; மைசூர் - வன்ஷிக் அங்கூர் கபாடியா; பெலகாவி - விருஷாலி ஷாம்கன்ட் தாக்கரே; பல்லாரி - தேஜாஸ் ரவீந்திர மஹாஜன் ஆகிய திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ