உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / ஆடுகளம் / பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் கேப்டனாக கர்நாடகாவின் தீபிகா தேர்வு  

பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட் கேப்டனாக கர்நாடகாவின் தீபிகா தேர்வு  

பெண்கள் பார்வையற்றோர் கிரிக்கெட்டில், முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நவம்பர் 11 முதல் 25ம் தேதி வரை, டில்லி, பெங்களூரில் உள்ள மைதானங்களில் நடக்க உள்ளன. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, அமெரிக்கா நாடுகள் கலந்து கொள்கின்றன. மொத்தம் 21 லீக் போட்டிகள் நடக்க உள்ளன. இந்த போட்டிகளை சமர்த்தனம் மாற்றுத்திறனாளிகள் அறக்கட்டளையின் கிரிக்கெட் பிரிவான, இந்திய பார்வையற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்து உள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் மஹாந்தேஷ் கிவடசன்னவர் கூறுகையில், ''பெண்கள் பார்வையற்றோருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை, இந்தியாவில் நடத்துவது பெருமைக்குரிய விஷயம். இந்திய அணியினர் நன்றாக விளையாடி கோப்பையை வென்று நாட்டை பெருமைப்படுத்துவர் என்ற நம்பிக்கை உள்ளது,'' என்றார். இந்த போட்டியில் 'பி3 பிரிவு' இந்திய அணி கேப்டனாக கர்நாடகாவின் டி.சி.தீபிகா தேர்வாகி உள்ளார். இந்த அணியில் கர்நாடகாவின் என்.ஆர்.காவ்யா இடம் பிடித்து உள்ளார். பி1 பிரிவில் கர்நாடகாவின் வி.காவ்யாவுக்கு இடம் கிடைத்து உள்ளது. கர்நாடகாவில் இருந்து 3 வீராங்கனைகள் இந்திய அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மூன்று வீராங்கனைகளுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ