மேலும் செய்திகள்
பைனலில் கர்நாடக அணி * ரஞ்சி கோப்பை தொடரில்
19-Feb-2026
- நமது நிருபர் - ஹரியானா மாநிலம், குருஷேத்திரத்தில் நடந்த தேசிய அளவிலான சப் ஜூனியர் கோ கோ போட்டியில், கர்நாடகா ஆண்கள் அணி வெள்ளிப்பதக்கமும், பெண்கள் அணி வெண்கல பதக்கமும் வென்றனர். ஹரியானா மாநிலம், குருஷேத்திரத்தில் கடந்த 2, 3ம் தேதிகளில் 35வது சப் ஜூனியர் கோ கோ போட்டி ஜன., 31 முதல் பிப்., 4 வரை நடந்தது. இதில், கர்நாடகா வீரர், வீராங்கனை அணி உட்பட 30க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர். இதில், வீரர்களுக்கான இறுதி போட்டியில் மஹாராஷ்டிராவுடன் கர்நாடக அணி மோதியது. இதில், வெள்ளிப்பதக்கம் பெற்றது. அதுபோன்று மூன்றாம் இடத்துக்கான போட்டியில் கர்நாடகா - பீஹார் வீராங்கனையர் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதலே கர்நாடக அணி தங்கள் திறமையை வெளிப்படுத்தி, புள்ளிகளில் தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. ஆட்ட இ றுதியில் கர்நாடக அணி 3வது இடத்தை பிடித்தது. அணியின் வெற்றிக்கு ஹூப்பள்ளியை சேர்ந்த 8ம் வகுப்பு மாணவி குஷி உறுதுணையாக இருந்தார். தார்வாட் மாவட்டம் ஹூப்பள்ளியை சேர்ந்த மாணவி குஷி, கூறியதாவது: தேசிய அளவிலான கோ கோ போட்டியில் நாங்கள் பங்கேற்று வெற்றி பெற்றோம். குருஷேத்திராவில் நடந்த போட்டியில் 30க்கும் மேற்பட்ட மாநில வீரர்கள் பங்கேற்றனர். நாங்கள் அனைத்து அணிகளுடனும் போட்டியிட்டு, மூன்றாவது இடத்தை பிடித்தோம். இது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. கடின உழைப்பால் இந்நிலையை அடைந்துள்ளோம். மருத்துவராக விரும்பும் நான், சர்வதேச அளவில் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று இலக்கு வைத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
19-Feb-2026