மேலும் செய்திகள்
ஆயுள் தண்டனையை எதிர்த்து பிரஜ்வல் மேல்முறையீடு
30-Sep-2025
உலக அளவில் டென்னிசில் ஜொலித்த இந்திய வீரர்களில், கர்நாடகாவின் ரோகன் போப்பண்ணாவும் ஒருவர். ஒரு காலத்தில் கர்நாடகாவில் இருந்து டென்னிஸ் விளையாடிவர் இவர் மட்டுமே. தற்போது நிறைய வீரர் -- வீராங்கனைகள் உருவெடுத்து வருகின்றனர். இவர்களில் மைசூரை சேர்ந்த பிரஜ்வல் தேவ், 29, முக்கியமானவர். கடந்த நான்கு ஆண்டுகளாக ஐ.டி.எப்., எனும் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் நடத்தப்படும் உள்ளூர், வெளிநாடுகளில் நடக்கும் போட்டிகளில் சிறப்பாக செயல்படுகிறார். டேவிஸ் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார். பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடியபோது டேவிஸ் கோப்பை அணிக்கு, மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்ட பிரஜ்வல், தன் அபார ஆட்டத்தின் மூலம், பெங்களூரு ஓபன் சேலஞ்சர் போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றார். தற்போது நல்ல பார்மில் விளையாடி வருகிறார். தன் விளையாட்டு பயணம் குறித்து பிரஜ்வல் தேவ் கூறியதாவது: என் தாத்தா சிவலிங்கய்யா. மஹாராஜா கல்லுாரியில் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். எனக்கு ஒன்பது வயதாக இருந்தபோது அவருடன் சேர்ந்து, டென்னிஸ் விளையாட செல்வேன். அப்போது இருந்து இந்த விளையாட்டின் மீது ஆர்வம் ஏற்பட்டது. டென்னிஸ் விளையாட, என் தந்தை தேவராஜ், தாய் நிர்மலா, பயிற்சியாளர் அர்ஜுன் கவுதம் ஆகியோர் ஊக்கம் அளித்தனர். பெங்களூரில் உள்ள பிரஹலாத் ஸ்ரீநாத், ரோகன் போப்பண்ணா ஆகியோரின் அகாடமியிலும் பயிற்சி பெற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரத்தை டென்னிஸ் பயிற்சிக்காகவும், இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்யவும் ஒதுக்குகிறேன். டென்னிசில் நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -
30-Sep-2025