மேலும் செய்திகள்
உருளை கிழங்கு தோட்டத்தில் களை எடுக்கும் பணி
01-Mar-2025
உருளைக்கிழங்கு பயன்படுத்தி சிப்ஸ், வறுவல், ஹல்வா, போண்டா என, பல விதமான தின்பண்டங்கள் செய்கின்றனர். உருளைக்கிழங்கு பாம்பே மசாலா செய்யலாம். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - அரை கிலோ கறிவேப்பிலை - ஒரு கொத்து மிளகாய் துாள் - ஒரு ஸ்பூன் மஞ்சள் துாள் - கால் ஸ்பூன் கொத்துமல்லி - ஒரு கைப்பிடி சீரகம் - ஒரு ஸ்பூன் கடுகு - ஒரு ஸ்பூன் இஞ்சி - சிறிய துண்டு பச்சை மிளகாய் - 1 உப்பு - தேவையான அளவு நெய் - ஒரு ஸ்பூன் எண்ணெய் - ஒரு ஸ்பூன் தனியா துாள் - ஒரு ஸ்பூன் செய்முறை
முதலில் உருளைக்கிழங்கை கழுவி, வட்ட, வட்டமாக நறுக்கவும். குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேக வைக்கவும். அதன்பின் அடுப்பை பற்ற வைத்து, வாணலியில் எண்ணெய் ஊற்றவும். காய்ந்த பின் கறிவேப்பிலை, கடுகு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, சீரகத்தை போட்டு நறுமணம் வரும் வரை வதக்கவும்.அதன்பின் இந்த கலவையில், தனியா துாள், மிளகாய் துாள், மஞ்சள் துாள் போடுங்கள். இந்த மசாலா கலவையில் உருளைக்கிழங்கை போட்டு, உடைந்து விடாமல் லேசாக கிளறவும். இறுதியில் தேவையான உப்பு போட்டு, கொத்துமல்லி தழையை துாவினால், பாம்பே மசாலா உருளைக்கிழங்கு தயார். தயிர் சாதம், ரசம், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம் என, அனைத்து சாதங்களுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும் - நமது நிருபர் -.
01-Mar-2025