உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சிறார்களுக்கு பிடித்தமான சீஸ் தோசை

சிறார்களுக்கு பிடித்தமான சீஸ் தோசை

நம்ம வீட்டு குட்டீஸ்களுக்கு 'எக்ஸாம்' டைம் வந்துடுச்சி. அதனால், குட்டீஸ்கள் ரொம்ப பயத்தில் இருப்பாங்க. அவங்கள 'கூல்' பண்ண வேண்டிய பொறுப்பு, அம்மாவின் கையில் தான் உள்ளது. அவங்களுக்கு பிடிச்ச மாதிரியான உணவுகளை செய்து கொடுக்க வேண்டியது அம்மாக்களின் கடமை.தற்போது, வித்தியாசமான உணவை சாப்பிடுவதையே குட்டீஸ்கள் விரும்புகின்றனர். அப்படி, பீட்சா ஸ்டைலில் வீட்டிலே வித்தியாசமான முறையில், 'சீஸ் தோசை' செய்து தரலாம்.இது செய்வதற்கு அதிகம் சிரமப்பட தேவையில்லை. அதே சமயம் குட்டீஸ்களுக்கு ரொம்ப பிடிக்கும். முக்கியமா, இந்த தோசையை செய்தால், சட்னி, சாம்பார் என தொட்டு சாப்பிட எதுவும் தேவையில்லை.

செய்முறை

முதலில் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் சேர்க்கவும். இதில், நறுக்கிய பெரிய வெங்காயம், நறுக்கிய பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து லேசாக வதக்கவும். பின், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். சிறிது நேரம் கழித்து மஞ்சள் துாள், மிளகாய் துாள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். இறுதியாக கொத்தமல்லி இலைகளை துாவி வாணலியை கீழே இறக்கவும்.இதன்பின், தோசை கல்லை அடுப்பில் வைக்கவும். தோசை கல் சூடு ஏறிய பின், தோசை மாவை அதில் ஊற்றவும். பின், செய்து வைத்த மசாலாவை அதில் போடவும். இதில், சீஸை மழை மாதிரி துாவவும்.சிறிது நேரம் கழித்து, தோசையை கல்லில் இருந்து எடுக்கவும். அவ்வளவு தான் சுவையான 'சீஸ்' தோசை தயார். இதை இரண்டாக வெட்டி தட்டில் பரிமாறவும்.குட்டீஸ் தோசையை பிய்த்து சாப்பிடும் போது, ஜவ்வு மிட்டாய் மாதிரி வரும் சீஸை பார்த்து ஆசைப்பட்டு, விரும்பி சாப்பிடுவர். அன்பின் அடையாளமாக, அம்மாவின் கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுப்பர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை