உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நாவில் எச்சில் ஊற வைக்கும் அப்பள குழம்பு

நாவில் எச்சில் ஊற வைக்கும் அப்பள குழம்பு

வழக்கமாக அப்பளத்தை, சாதம், பாயசத்துடன் சேர்த்து சாப்பிட்டிருப்போம். ஆனால், காய்கறிகள் இல்லாமல், அப்பளத்தில் குழம்பு தயாரித்து, அதையே உணவில் சமைத்து சாப்பிட்டுள்ளீர்களா. இல்லை எனில், இந்த 'ரெசிப்பி'யை உங்கள் வீட்டில் இன்று 'டிரை' பண்ணி பாருங்கள்.

செய்முறை:

 முதலில் கடாயில் 25 மி.லி., நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும், 5 காய்ந்த மிளகாய், ஒரு டீஸ்பூன் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன் கால் ஸ்பூன் வெந்தயம், கொஞ்சம் கறிவேப்பிலை, பத்து பல் பூண்டு, 15 சின்ன வெங்காயம் போட்டு வதக்கவும். சின்ன வெங்காயம் நன்கு வதங்கிய பின், அதில் இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை நறுக்கி போடவும். பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். அடுத்ததாக கால் ஸ்பூன் மஞ்சள் துாள், ஒரு டீஸ்பூன் பெருங்காய துாள், தேவையான அளவு உப்பு, இரண்டு டீஸ்பூன் சாம்பார் துாள், அரை ஸ்பூன் மிளகாய் துாளுடன் சேர்த்து கால் லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இரண்டு கொதி வந்த பின், எலுமிச்சை சைஸ் புளியை 200 மி.லி., தண்ணீரில் கரைக்கவும். அதை வாணலியில் ஊற்றி வாசனை போகும் வரை கொதிக்க விடுங்கள். சுவையை அதிகரிக்க ஒரு ஸ்பூன் வெல்லம் சேர்த்து, மீண்டும் 250 மி.லி., தண்ணீர் ஊற்றுங்கள். எட்டு நிமிடங்கள் நன்கு கொதிக்க வேண்டும். அடுத்ததாக பொறித்த அப்பளங்களை இரண்டாக உடைத்து குழம்பில் போட்டு, இரண்டு நிமிடங்களுக்கு மிதமான சூட்டில் கொதிக்க விடுங்கள். இறுதியாக ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தனியாக வறுத்து மிக்ஸியில் அரைத்து, குழம்பில் போட்டு அடுப்பில் இருந்து இறக்கி விடுங்கள். ஒரு மணி நேரம் அப்பளம் ஊற வேண்டும். அதன்பின் சாப்பிடலாம். அலாதி சுவையுடன் இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !