உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / வெயிலுக்கு இதமான குளுகுளு பானை பிரினி

வெயிலுக்கு இதமான குளுகுளு பானை பிரினி

கோடை காலம் துவங்கிவிட்டது. இந்த வெயிலில் இருந்து தப்பிக்க இளநீர், நுங்கு, தர்பூசணி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். வீட்டிலேயே எலுமிச்சை சாறு, பானகம், சர்பத் உள்ளிட்டவற்றை தயார் செய்து பருகலாம்.அப்படி, வீட்டில் செய்வதில் சற்று வித்தியாசமாகவும், சுவை மிகுந்த பானை பிரினி செய்து சாப்பிடலாம். இதை செய்வது, மிக எளிது. அதே சமயம் சுவையோ அதிகம்.பிரினி எல்லோரும் விரும்பி உண்ணும் இனிப்பு வகைகளில் ஒன்று. இது பெரும்பாலும் வட மாநிலங்களில் அதிகம் விரும்பி சாப்பிடுகின்றனர். இதை செய்வதற்கு அதிக பொருட்களோ, அதிக நேரமோ தேவைப்படாது.

தேவையான பொருட்கள்

 பால் -- 1/2 லிட்டர் அரசி - 1 கப் குங்குமப்பூ - சிறிதளவு ரவை - 1 கப் பால் கோவா - 1 கப் அலுமினிய பேப்பர் - 1 அட்டை குட்டி மண் பானை - 1 பாதாம், பிஸ்தா - 10

செய்முறை

ஒரு வாணலியில் பாலை ஊற்றி நன்கு காய்ச்ச வேண்டும். அதில், சிறிது குங்குமப்பூ சேர்த்து, பாலை நன்கு கொதிக்க விடவும். பால் கெட்டியானதும், அதில் ரவை சேர்த்து, 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.இந்த சமயத்தில், அடி பிடிக்காத வகையில் கலக்கி கொண்டே இருக்க வேண்டும். சுவைக்கு ஏற்ப சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பால் கோவாவை சேர்த்து மிதமான தீயில் கொதிக்க வைக்கவும்.பால் சற்று கெட்டியாக பிரினி பதத்திற்கு வந்த உடன், அடுப்பை 'ஆப்' செய்துவிட்டு, வாணலியை கீழே இறக்கவும்.பாலை நன்கு ஆற வைத்த பின், ஒரு குட்டி மண் பானையில் ஊற்றி, அதை அலுமினிய பேப்பரால் மூடி குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.பின் குளிர்சாதன பெட்டியில் இருந்து மண்பானையை எடுத்து, அதில் பாதாம், பிஸ்தாவை மேலே போட்டு சுவையான குளுகுளு பிரினியை சுவைக்கலாம்.மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, அதன் பின் சாப்பிட்டால் செமையாக இருக்கும். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை