உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் உள்ளி காரம்

ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் உள்ளி காரம்

பாகற்காயை உணவில் எடுத்துக் கொள்வது ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. ஊட்டச்சத்து நிறைந்த காய் என்றாலும், கசப்பு தன்மையால் பாகற்காயை பெரும்பாலானோர் உணவில் சேர்க்காமல் தவிர்ப்பது உண்டு. பாகற்காயை விரும்பி சாப்பிடுவோர், பாகற்காய் வறுவல் அதிகம் சாப்பிடுவது உண்டு. பாகற்காயை வைத்து ஆந்திர ஸ்டைலில் பாகற்காய் உள்ளி காரம் செய்யலாம். செய்முறை பாகற்காயை தடிமனாக வட்ட வடிவில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தனியா, உளுந்து, மிளகாய், சீரகம், புளி, மஞ்சள் பவுடர், வெங்காயம் போட்டு நன்கு வதக்க வேண்டும். சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். மசாலா கலவையை, நறுக்கி வைத்திருக்கும் பாகற்காயுடன் சேர்த்து 'டிப்' செய்யவும். பின், கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், டிப் செய்த பாகற்காயை சேர்த்து மூடிவைத்து வேக விடவும். மசாலா நன்கு நிறம் மாறி, பாகற்காய் சிவந்து வந்ததும் அடுப்பை ஆப் செய்ய வேண்டும். சுவையான ஆந்திரா ஸ்டைல் பாகற்காய் உள்ளி காரம் ரெடி. லெமன் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், தோசை, சப்பாத்திக்கு தொடு கறியாக வைத்து சாப்பிடலாம் - நமது நிருபர் - .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை