மேலும் செய்திகள்
நாவில் எச்சில் ஊற வைக்கும் வாழைக்காய் கோலா
13-Dec-2025
நீங்கள் செய்யக்கூடிய தின்பண்டங்கள் வெறும் சுவைக்காக மட்டுமில்லாமல், ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில், இந்த வாரம் வாழைப்பழங்களை கொண்டு, 'வாழைப்பழ உருண்டை' செய்வது குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள் l செவ்வாழை -- 1 கப் l நெய் -- 100 கிராம் l ரவை -- ஒரு கப் l பால் -- ஒரு கப் l சர்க்கரை -- ஒரு கப் l தேங்காய் துருவல் -- ஒரு கப் l ஏலக்காய் துாள் -- 2 டீஸ்பூன் l செய்முறை: l ஒரு கடாயை அடுப்பில் வைத்து 2 டீஸ்பூன் நெய் ஊற்றிக் கொள்ளவும். l நெய் சிறிது சூடேறியதும், வெட்டி வைத்துள்ள 2 செவ்வாழை பழங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். l நெய், செவ்வாழை இரண்டும் நன்கு வதங்கி வரும் போது, ஒரு கப் ரவையை அதில் சேர்க்கவும். l ஐந்து நிமிடத்திற்கு வதக்கிய பின், தேங்காய் துருவலையும் சேர்த்து நன்கு கிளறுங்கள். l இதனுடன் ஒரு கப் பால் சேர்த்து, ரவையை நன்கு வேக வைக்கவும். பின், இதனுடன் ஒரு கப் சர்க்கரை, சிறிதளவு ஏலக்காய் துாள் சேர்த்து கொள்ளவும். l இந்த கலவையை மிதமான சூட்டில் ஐந்து நிமிடம் வைத்திருங்கள். l கைகளால் தொடும் சூடு இருக்கும் போது சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளுங்கள். l இதையடுத்து ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி, உருண்டைகள் அனைத்தும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் போதும். சுவையான வாழைப்பழ உருண்டை ரெடி - நமது நிருபர் - .
13-Dec-2025