உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  முட்டைகோசில் ஆனியன் பக்கோடா

 முட்டைகோசில் ஆனியன் பக்கோடா

- நமது நிருபர் -: மொறு மொறுப்பான முட்டைகோஸ் பக்கோடாவை எளிய முறையில் எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போமா? தேவையான பொருட்கள்  நறுக்கிய முட்டைகோஸ் - 1 கப்  நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்  கடலை மாவு - 1/2 கப்  அரிசி மாவு - 3 டீஸ்பூன்  பச்சை மிளகாய் - 3  கொத்துமல்லி - சிறிதளவு  உப்பு -தேவையான அளவு  எண்ணெய் -தேவையான அளவு செய்முறை முதலில் முட்டைகோஸ், வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பின், ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முட்டைகோஸ், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உப்பு, கடலை மாவு, அரிசி மாவு தண்ணீர் சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பக்கோடா போடுவதற்கு உகந்த வகையில் மாவின் பதம் இருக்க வேண்டும். பின், ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும், அதில் மாவுக்கலவையை சிறு சிறு பகுதிகளாக போட வேண்டும். எண்ணெயில் நன்கு பொறிந்ததும், அதை வேறு பாத்திரத்திற்கு மாற்ற வேண்டும். அவ்வளவு தான், முட்டைகோஸ் பக்கோடா தயார். இதை, மாலை நேரத்தில் சூடாக செய்து சாப்பிடுவது இதமாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ