மாறுபட்ட சுவையுடன் கேரட் மபின்ஸ்
கேரட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். இதை பயன்படுத்தி அல்வா உட்பட, பல விதமான இனிப்புகள் செய்வர். சாம்பார், புலாவ், குருமா போன்ற கார வகை உணவுக்கும் கேரட் பயன்படுத்துவர். 'கேரட் மபின்ஸ்' செய்து பாருங்கள். மாறுபட்ட சுவையுடன் இருக்கும். செய்முறை முதலில் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, பேக்கிங் பவுடர், லவங்கம் துாள், இஞ்சி விழுது, ஜாதிக்காய் துாள், உப்பு சேர்த்து கிளறவும். மற்றொரு பாத்திரத்தில் பாதாம் பால், எண்ணெய், முட்டை, சர்க்கரை, வெனிலா எசென்ஸ் சேர்க்கவும். அதன்பின் இரண்டு பாத்திரங்களில் உள்ளவற்றை, ஒரே பாத்திரத்தில் போட்டு நன்றாக கிளறவும். இதில் உலர்ந்த திராட்சை, பொடித்த வால்நட்ஸ் போடவும். இதை கிளறி கப்களில் நிரப்பவும். அதன் மீது ஓட்ஸ் துாவவும். அதன்பின் மைக்ரோ ஓவனில், 20 நிமிடங்கள் வேக வைத்தால், சுவையான கேரட் மபின்ஸ் ரெடி. - நமது நிருபர் -