சப்பாத்தி சிப்ஸ்
இரவு உணவுக்காக செய்த சப்பாத்தி மீந்துவிட்டதா? அதை குப்பையில் வீசி எறியாதீர்கள். இந்த சப்பாத்தியில் சுவையான சிப்ஸ் செய்யலாம். இதை தயாரிக்க வெறும் ஐந்து நிமிடங்கள் போதும். தேவையான பொருட்கள் சப்பாத்தி - 1 அல்லது 2 பிளாக் சால்ட்- ஒரு ஸ்பூன் எண்ணெய் - ஐந்து ஸ்பூன் சாட் மசாலா - இரண்டு ஸ்பூன் செய்முறை முதலில் சப்பாத்திகளை, நீரில் நனைத்து ஈரமாக்கவும். அதன்பின் தோசைக்கல்லில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அதில் சப்பாத்தியை போட்டு, மொறு, மொறுப்பாகும் வரை, இரண்டு பக்கமும் திருப்பிப் போடவும். சப்பாத்தி அப்பளம் போன்று கெட்டியாக வேண்டும். ஆனால் தீய்ந்து விடக்கூடாது. அதன்பின் சப்பாத்தியின் மைய பகுதியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதை சிப்ஸ் போன்று சிறு, சிறு துண்டுகளாக்கவும். இந்த துண்டுகளின் மீது சாட் மசாலா, பிளாக் சால்ட் துாவி சிறிது நேரத்துக்கு பின், சாப்பிடலாம். மொறு மொறுவென்று சுவையாக இருக்கும் -நமது நிருபர் - .