உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / சிக்கன் பாப்கார்ன்

சிக்கன் பாப்கார்ன்

எண்ணெய் சேர்க்காமல், சிறிய, கடிக்கக்கூடிய, சாறு நிறைந்த கோழிக்கறியுடன், பிரெட் தூளில் புரட்டி, கச்சிதமாக வேகவைக்கப்பட்ட இந்த சிக்கன் பாப்கார்ன், அனைவருக்கும் பிடித்தமான சிற்றுண்டியாகும். இதை எந்த நேரத்திலும் கொறித்துத் தின்னலாம். தேவையான பொருட்கள் கோழி மார்புக்கறி : ½ கிலோ இஞ்சி பூண்டு விழுது : 2 ஸ்பூன் தயிர் : 2 ஸ்பூன் ஷெஸ்வான் சாஸ் : 1 ஸ்பூன் சிவப்பு மிளகாய் சாஸ் : 1 ஸ்பூன் தக்காளி சாஸ் : 2 ஸ்பூன் கருப்பு மிளகு : 2 ஸ்பூன் தேவையான அளவு உப்பு ரொட்டித் தூள் : 100 கிராம் செய்முறை : கோழி மார்புக்கறியை சிறு துண்டுகளாக நறுக்கி நன்கு கழுவவும். அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்து எடுக்கவும். இஞ்சி பூண்டு விழுது, தயிர், தக்காளி சாஸ், மிளகாய் சாஸ், செஸ்வான் சாஸ், மிளகு மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும். ஊறவைத்து, ஓரிரு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் தனியாக வைக்கவும். ஒவ்வொரு துண்டையும் ரொட்டித் தூளில் புரட்டவும். ஒவ்வொன்றையும் தனித்தனியாக ஏர் பிரையரில் வைத்து எண்ணெய் தடவவும். மேல்புறம் மொறுமொறுப்பாகவும், கோழிக்கறி மென்மையாகவும் ஆகும் வரை, 200 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சுமார் 10 முதல் 12 நிமிடங்கள் சமைக்கவும். தடிமனான அடிப்பான பாத்திரத்தில் குறைந்த வெப்பத்தில் வறுக்கவும். உங்களுக்கு விருப்பமான சாஸ் அல்லது மயோனைஸுடன் சிக்கன் பாப்கார்னைச் சுவைத்து மகிழுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை