உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  குழந்தைகள் விரும்பி சுவைக்கும் தேங்காய் பன்

 குழந்தைகள் விரும்பி சுவைக்கும் தேங்காய் பன்

நமது நிருபர் -: பேக்கரிகளில் விற்கப்படும் மற்ற தின்பண்டங்களை விட, 'தேங்காய் பன்' மீதான நம் பார்வை விலகாது. சிறு வயதில் நம் பெற்றோர் வாங்கி கொடுத்த நினைவுகள் வந்து சேரும். இதையே நம் குழந்தைகளுக்கும் வாங்கி கொடுத்து, நாமும் சாப்பிட தோன்ற வைக்கும். அத்தகைய தேங்காய் பன் ரெசிபியை, இந்த வாரம் செய்து பாருங்களேன். தேவையான பொருட்கள் * மைதா மாவு - 2 கிப் * உலர் ஈஸ்ட் - அரை டேபிள் ஸ்பூன் * வெதுவெதுப்பான பால் - அரை கப் * சர்க்கரை - 3 முதல் 4 டேபிள் ஸ்பூன் * வெண்ணெய் / நெய் - 2 டேபிள் ஸ்பூன் * உப்பு - அரை தேக்கரண்டி 'ஸ்டப்பிங்கிற்கு' * துருவிய தேங்காய் - 1 கப் * சர்க்கரை - கால் கப் * டூட்டி ப்ரூட்டி - கால் கப் * முந்திரி, ஏலக்காய் துாள் - சிறிதளவு செய்முறை  வெதுவெதுப்பான பாலில் சிறிது சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து 10 நிமிடம் மூடி வைக்கவும்  மைதா, மீதி சர்க்கரை, உப்பு, ஈஸ்ட் கலவை, வெண்ணெய் சேர்த்து, மென்மையாக பிசைந்து, இரண்டு மணி நேரம் மூடி வைக்கவும்  ஒரு கிண்ணத்தில் துருவிய தேங்காய், சர்க்கரை, டூட்டி ப்ரூட்டி, முந்திரி, நெய், ஏலக்காய் துாள் சேர்த்து நன்றாக கலக்கவும்  ஊறிய மாவை சிறு உருண்டைகளாக்கி, தட்டி நடுவில் தேங்காய் கலவையை வைத்து மூடி, மீண்டும் பன் வடிவம் கொடுக்கவும்  ஓவனில் 180 டிகிரி செல்ஷியசில் 15 முதல் 20 நிமிடம் அல்லது பொன்னிறமாகும் வரை பேக் செய்யவும். ஓவன் இல்லையெனில், தவா அல்லது குக்கரில் குறைந்த தீயில் பேக் செய்தால், சூடான தேங்காய் பன் ரெடி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை