உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  சமையல் மணக்க டிப்ஸ்

 சமையல் மணக்க டிப்ஸ்

கருவாடு குழம்பு செய்யும் போது, கடைசியாக மூன்று பல் பூண்டு தட்டி போட்டால் குழம்பு மணமாக இருக்கும். l தோசைக்கு மாவு அரைக்கும் போது, அதனுடன் சிறிது வடித்த சாதம் சேர்த்து அரைத்தால், தோசை பஞ்சு போன்று மென்மையாக வரும். l நல்லெண்ணெய் பாட்டிலில், கொஞ்சம் வெல்ல உருண்டை போட்டால் சிக்கு வாடை வராது. l இனிப்புகளுக்கு ஏலக்காயுடன் சிறிதளவு பச்சை கற்பூரம், ஒரு கிராம்பு, சிறிதளவு ஜாதிக்காய் சேர்த்து பொடி செய்து பயன்படுத்தினால், வாசனையாக இருக்கும்; சுவையும் கூடும். l கொத்துமல்லி இலையில் துவையல் செய்யும் போது, தயிர் சேர்த்து அரைத்தால் சுவை அதிகரிக்கும். l குலோப் ஜாமூன் மிக்சில் உப்பு, காரம், பன்னீர் சேர்த்து பிசைந்து பொரித்து எடுத்து, கிரேவியில் சேர்த்தால் பன்னீர் கப்தா ரெடி. l கட்லெட் செய்யும் போது பிரட் துாள் தீர்ந்து விட்டால், சிறிது ரவையில் புரட்டி எடுக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ