உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / மொறு மொறு கத்திரிக்காய் வறுவல்

மொறு மொறு கத்திரிக்காய் வறுவல்

கத்திரிக்காய் வைத்து காரக் குழம்பு, தொக்கு, கூட்டு, சாதம் போல பல விதமான உணவுகள் செய்து சாப்பிட்டு இருப்பீங்க. அதே கத்திரிக்காயை வைத்து உருளைக் கிழங்கு வறுவல் மாதிரி கூட செய்து சாப்பிட முடியும். கேட்பதற்கு வித்தியாசமாக இருப்பது போல, சுவையும் மிகுந்த வித்தியாசமாக இருக்கும்.கத்திரிக்காய் வறுவல் லெமன், புளி, சாம்பார், ரசம் சாதங்களுக்கு சேர்த்து சாப்பிடும்போது அதீத சுவையை தரும். சாப்பிடும்போது மொறு மொறுவென இருக்கும்.இதை சாப்பாட்டுக்கு தொட்டுக்க மட்டுமில்லாமல் அப்படியே ஸ்நாக்ஸ் போல கூட சாப்பிடலாம். இப்படி சாப்பிடும் போது, அத்துடன் தக்காளி சாஸ் சேர்த்து சாப்பிட்டால் ஹோட்டலில் சாப்பிட்ட டேஸ்ட் கிடைக்கும்.குறிப்பாக இந்த டிஷ்ஷை கத்திரிக்காய் பிடிக்காத குட்டீஸ்களும் கூட விரும்பி சாப்பிடுவர். டிபன் பாக்சில் போட்டு பள்ளிக்கு கொடுத்து அனுப்பினால், வீட்டுக்கு வரும்போது டிபன் பாக்ஸ் காலியாக தான் வரும்.

செய்முறை:

நன்கு கழுவிய கத்திரிக்காய்களை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். அதில் லேசாக தண்ணீர் தெளித்து, சோள மாவு சேர்த்து பிரட்டி எண்ணெயில் போட்டு பொறித்து கொள்ளவும்.ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இதில், நறுக்கப்பட்ட பூண்டு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி கொள்ளவும். சோயா சாஸ், தக்காளி சாஸ், வினிகரை ஊற்றி நன்றாக கிளறவும்.சிறிது நேரத்திற்குப் பின், ஏற்கனவே பொறித்து வைத்துள்ள கத்திரிக்காயை சேர்த்து நன்றாககிண்டவும். இதன்பின், வெள்ளை எள், கொத்தமல்லி இலைகளை மேலோட்டமாக துாவி, அடுப்பில் இருந்து வாணலியை இறக்கவும். அவ்வளவு தான், சுவையான 'கிரிஸ்பி கத்திரிக்காய் வறுவல்' தயார். இதை லெமன் சாதத்துடன் தொட்டு சாப்பிடும் போது, சுவை படு ஜோராக இருக்கும். இந்த மாதிரி செய்து கொடுத்தால் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ