உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை / நொறுக்குகள்

நொறுக்குகள்

காலிபிளவரில் உள்ள புழுக்கள் அழிவதற்கு சுடு தண்ணீரில் மஞ்சள், உப்பு சேர்த்து சிறிது நேரம் ஊற வைக்கலாம். கேசரி செய்யும்போது கேசரி பவுடர் சேர்க்காமல் குங்குமப்பூ சேர்த்தால் சுவையும் மணமும் கூடும். ஆப்பத்திற்கு மாவு அரைக்கும்போது மீந்துபோன சாதத்தை சேர்த்து அரைக்கலாம். வாழைக்காய், உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது பூண்டு தட்டி சேர்த்தால் வாயு பிரச்னை வராது. தோலில் ஏற்படும் சுருக்கம் குணமாக நாவல் பழம் சாப்பிட்டு வந்தால் தோலில் ஏற்படும் சுருக்கங்கள் குணமாகும். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது கிழங்கை குழைவாக வரும் பதத்திற்கு செய்தால் சுவை கூடும். சிக்கன் 65 செய்யும்போது, எலும்புகளை நீக்கிவிட்டு சிறிய, சிறிய துண்டுகளாக எண்ணெயில் போட்டு வறுத்து எடுத்தால் சுவை அதிகமாக இருக்கும். முட்டை சூப்பில் சுண்டல், பெப்பர் போட்டு செய்தால் சுவை பிரமாதமாக இருக்கும். உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது தோலை முற்றிலும் நீக்கிவிட்டு செய்தால் நன்றாக இருக்கும். இறாலை மஞ்சள் நீரில் கழுவி எடுத்தால் அதன் மீது வரும் கெட்ட நாற்றம் விரைவில் போகும். பாயாசம் செய்யும்போது இறுதியாக ஏலக்காய் பொடியை சேர்த்தால் மணம் கூடும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை