உள்ளூர் செய்திகள்

/ ஸ்பெஷல் / அறுசுவை /  நொறுக்குகள்

 நொறுக்குகள்

- நமது நிருபர் -:  ரசம் தாளிக்கும்போது பெருங்காயம், கறிவேப்பிலையை புளித்தண்ணீரில் சேர்க்காமல், தாளிக்கும் எண்ணெய்யில் சேர்த்தால் ரசம் நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.  பூண்டை சிறிது நேரம் தண்ணீரில் ஊறவைத்து உரித்தால், மேல் தோலை எளிதாக நீக்கலாம்.  தேங்காய் துவையல் அரைக்கும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால், துவையல் நல்ல மணத்துடனும் சுவையுடனும் இருக்கும்.  ஆப்ப மாவுடன் சீரகம், தேங்காய் துருவல், பச்சை மிளகாய் அனைத்தையும் அரைத்து சேர்த்து சுட்டால் மசாலா ஆப்பம் தயாராகிவிடும்.  எலுமிச்சை ஊறுகாய் விழுதில், கேரட் துண்டுகளை போட்டு ஊறவைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.  வெண்பொங்கல் வெந்ததும், ஒரு கரண்டி காய்ச்சிய பாலை சேர்த்து கிளறி மூடி வைத்தால், பொங்கல் மேலும் சுவையாக இருக்கும்.  வெண்டைக்காய் பொரியலில் வறுத்த வேர்க்கடலை பொடி சேர்த்து வதக்கினால், பொரியல் கூடுதல் சுவையுடன் இருக்கும்.  வெஜிடபிள் ரைஸ், நெய்சாதம் போன்றவற்றை செய்யும்போது, தேங்காய்ப்பால் சேர்த்து செய்தால் சுவை சிறப்பாக இருக்கும்.  உளுந்து வடை மாவை நைசாக அரைத்து, வேக வைத்து உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்து வடை செய்தால், வடை மொறுமொறுப்பாக இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !