மேலும் செய்திகள்
10 நிமிடத்தில் குஸ் குஸ்
27-Dec-2025
- நமது நிருபர் - வெள்ளரிக்காயை உணவில் எடுத்து கொள்வதன் மூலம், உடலில் ஏற்படும் சூட்டை குறைப்பதுடன், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கோடை காலங்களில் அதிகமாக வெள்ளரிக்காய் சாப்பிடுவதில், உடலில் நீர்சத்து அதிகரிக்கவும் உதவுகிறது. பல நன்மைகளை கொண்ட வெள்ளரிக்காயை வைத்து 15 நிமிடங்களில் சாதம் செய்து விடலாம். தேவையான பொருட்கள் l இரண்டு வெள்ளரிக்காய் l தேவையான அளவு எண்ணெய் l இரண்டு டீஸ்பூன் நெய் l ஒரு டீஸ்பூன் கடலை பருப்பு l ஒரு டீஸ்பூன் உளுந்தம் பருப்பு l இரண்டு சிவப்பு மிளகாய் l கால் டீஸ்பூன் பெருங்காய பவுடர் l இஞ்சி சிறிய துண்டு l மூன்று பச்சை மிளகாய் l ஒரு பெரிய வெங்காயம் l இரண்டு கப் பாஸ்மதி அரிசி செய்முறை இரண்டு வெள்ளரிக்காயை நன்கு துருவி கொள்ள வேண்டும். அடுப்பை ஆன் செய்து கடாயை வைத்து எண்ணெய், நெய் ஊற்றி சூடானதும், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கடுகு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இதனுடன் பெருங்காய பவுடர், தோல் சீவிய இஞ்சி துண்டு, கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின், ஒரு கப் துருவிய தேங்காய், பாத்திரத்தில் வைத்திருக்கும் வெள்ளரிக்காயை போட்டு கிளறி, இதனுடன் வேக வைத்த பாஸ்மதி அரிசி சேர்த்து நன்கு கிளறி விட்டு ஐந்து நிமிடம் கழித்து, அடுப்பை ஆப் செய்து, கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரி சேர்த்தால் சூடான, சுவையான வெள்ளரிக்காய் சாதம் தயார்.
27-Dec-2025